| Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைத்த ஈரான்! [Friday 2026-09-11 16:00] |
![]() Claude AI பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்கள் குறிவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது. அமெரிக்க AI நிறுவனம் Anthropic வெளியிட்ட புதிய அறிக்கையில், ஈரானுக்கு தொடர்புடைய குழுக்கள் Claude AI-ஐ பயன்படுத்தி அமெரிக்க கடற்படை தளங்களை குறிவைக்க தகவல்களை சேகரித்ததாக கூறப்பட்டுள்ளது. அந்த குழுக்கள், பொதுவாக இணையத்தில் கிடைக்கும் தகவல்களை Claude மூலம் பகுப்பாய்வு செய்து, “Targeting Handbooks” எனப்படும் வழிகாட்டி ஆவணங்களை உருவாக்கியதாக Anthropic தெரிவித்துள்ளது |
இதில் அமெரிக்க கடற்படை வீரர்களின் பெயர்கள், கப்பல்கள் மற்றும் விமானங்களின் அடையாள எண்கள், செயற்கைக்கோள் படங்கள், மற்றும் பொதுவாக வெளிப்படும் இணையதளங்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும், Claude-ஐ பயன்படுத்தி கப்பல் தொடர்பு அமைப்புகள், Cisco சாதனங்கள், VSAT terminals போன்றவற்றின் பலவீனங்களை ஆராய்ந்ததாகவும் அறிக்கை கூறுகிறது. ஈரான் சமீபத்தில் USS Delbert D Black, USS John Paul Jones போன்ற அமெரிக்க போர் கப்பல்களை ஏவுகணைகளால் தாக்கியிருந்தது. அதேபோல், பஹ்ரைனில் உள்ள US Navy Fifth Fleet தலைமையகம் குறிவைக்கப்பட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேரடியாக பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை Anthropic-ன் அறிக்கையில், Claude AI மூலம் சேகரிக்கப்பட்ட தகவல்கள் நேரடியாக தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்டதற்கான ஆதாரம் இல்லை எனவும், ஆனால் AI-ஐ தவறாக பயன்படுத்தும் அபாயம் மிகுந்தது எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், ஈரான் கலாச்சார மற்றும் தொடர்பு அமைப்புடன் தொடர்புடைய கணக்குகள், ஆயத்துல்லா அலி கமேனியின் இறுதி ஊர்வல திட்டங்கள் மற்றும் வாரிசு தொடர்பான ஆவணங்களை Claude-இல் பதிவேற்றியதாகவும் Anthropic கண்டறிந்துள்ளது. இந்த தகவல்கள், AI தொழில்நுட்பத்தின் தவறான பயன்பாடு உலகளாவிய பாதுகாப்பிற்கு பெரிய சவாலாக மாறி வருவதை வெளிப்படுத்துகின்றான். |
-
11 செப்., 2026
www.pungudutivuswiss.com
