-

24 அக்., 2026

ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பாது! [Saturday 2026-10-24 05:00]

www.pungudutivuswiss.com


செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் தொல்லியல் நிபுணரான ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பாது. செம்மணி இனப்படுகொலையின் ஆதாரமாகும் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற  உறுப்பினர்  செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

செம்மணி மனிதப் புதைகுழி விடயத்தில் தொல்லியல் நிபுணரான ராஜ் சோமதேவவின் அறிக்கை உண்மைக்கு புறம்பாது. செம்மணி இனப்படுகொலையின் ஆதாரமாகும் ஜனநாயகத் தமிழ் தேசிய கூட்டணியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற விசர்நாய்க் கடி நோயை ஒழித்தல் மற்றும் நாய்களை பதிவு செய்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றும் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் உரையாற்றுகையில்,

எமது நாட்டில் யானை,நாய்கள் போன்ற மிருகங்களுக்கு உள்ள முக்கியத்துவம் மனிதர்களுக்கு கிடையாது. மனிதர்களுக்கு எந்தவொரு உத்தரவாதமும் கடந்த கால அரசாங்கங்களால் செய்யப்படவில்லை. இப்போதும் அது உறுதிப்படுத்தபடாமல் இருக்கின்றது.

செம்மணி மனிதப் புதைகுழி தொட ர்பில் தொல்லியல் நிபுணரான ராஜ் சோமதேவவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் உண்மைக்கு புறம்பானதாக காணப்படுகிறது. அவர் மண்ணை பரிசோதிக்கும் தகுதியையே கொண்டுள்ளார். அங்கு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரையிலானோரின் எச்சங்களை விஞ்ஞான ரீதியான பகுப்பாய்வுக்கு கொண்டு சென்று என்ன நடந்தது என்று குறிப்பிட முடியும். ஆனால் இவரின் அறிக்கையை கொண்டு எந்தவொரு முடிவுக்கும் வர முடியாது.

போர் காலத்தில் பல இடங்களில் முப்படையினரின் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன. அதனை தாண்டி வந்தாலே அவர் உயிருடன் இருப்பதாக கூற முடியும். போர் காலத்தில் பல சம்பவங்களை நாங்கள் கண்ணூடாக கண்டுள்ளோம். யாழ்ப்பாணத்தில் இருந்து வன்னிக்கு புலம்பெயர்ந்து சென்ற மக்கள் திரும்பி வரும் போது அரியாலை-கொழும்புத்துறை கடல் பகுதிக்கு அருகில் உள்ள இராணுவ சோதனை சாவடியில் சோதனை செய்யப்படுவர். மக்கள் தனியாக அன்றி குழுவாகவே வருவார்கள். அவர்களை தடுத்து வைத்தே இராணுவத்தினர் விசாரணை நடத்துவர்.

10 நாட்களுக்கும் மேலாக தடுத்து வைத்து விசாரணை நடத்தப்படுவர். அவர்களில் ஒருவர் இருவர் சந்தேகத்திற்கிடமானவர்களாக இருந்தால் ஏனையவர்களையும் வெளியில் விடுவது ஆபத்தானது என்று படையினர் கருதியதால் அவர்களையும் விடமாட்டார்கள். அவ்வாறான சூழலே அன்றைய காலத்தில் இருந்தது. இந்நிலையில், இந்த சோதனை சாவடியில் தடுத்துவைக்கப்பட்ட பலர் செம்மணியில் புதைக்கப்பட்டுள்ளனரா? என்று சந்தேகிக்கின்றேன். இந்த விடயத்தை இவ்விடத்தில் பதிவு செய்கின்றேன்.

செம்மணி என்பது தமிழ் பேசும் மக்களின் படுகொலையின் ஆதராமாகும்.உண்மையை கண்டறிய வேண்டும் என்ற விடயமாக இருக்கின்றது. இந்த மனிதப் புதைகுழியில் சிறுவர்கள், பெரியவர்கள் என்று எல்லோரும் புதைக்கப்பட்டுள்ளனர். குழந்தைகளின் எலும்புக்கூடுகள் பொம்மையுடனும் மீட்கப்பட்டுள்ளன. சூட்டுக் காயங்களுடனும் எச்சங்கள் உள்ளன. இதனால் குறிப்பிட்ட அறிக்கையை உண்மைக்கு புறம்பான அறிக்கையாகவே பார்க்கின்றோம்.போர் தொடர்பில் சர்வதேச விசாரணைக்கு கோரிக்கை விடுக்கின்றோம். இவ்வாறான நிலைமையில் இந்த அறிக்கை உள்ளக விசாரணையில் உண்மைகள் மறைக்கப்படுகின்றது.

இதனாலேயே எமது இனப்பிரச்சினை மற்றும் மனித உரிமை மீறல்கள் அனைத்தும் சர்வதேச விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறுகின்றோம். எமது மக்களின் அழிவுக்கு காரணமானவர்கள் மற்றும் அழிக்க நினைத்தவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். இந்த விசாரணைகளை உள்ளக விசாரணையாக அரசாங்கம் கூறுகின்றதை ஏற்க முடியாது. அதற்கு செம்மணி புதைகுழி அறிக்கையை சுட்டிக்காட்ட முடியும். இதில் அரசாங்கம் இறுதி முடிவுக்கு வரக் கூடாது. இதில் பகுப்பாய்வை மேற்கொண்டு, என்ன நடந்தது என்று சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்ற கோரிக்கையை விடுக்கின்றேன் என்றார்.

ad

ad