-

10 நவ., 2026

www.pungudutivuswiss.com
ஞானசார தேரருக்கு காவியுடை - மகாநாயக்கர்கள் கோரிக்கை!
[Tuesday 2026-11-10 06:00]

நீதிமன்றத்தை அவமதித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிப்பதற்காக, தாம் உள்ளிட்ட பத்து பிக்குகள் அடங்கிய சங்க சபைப் பிரதிநிதிகள் குழுவொன்று சிறைச்சாலைக்குச் செல்லத் தயாராக இருப்பதாக சியாம் மகா நிகாயவின் கோட்டே பிரிவின் மகாநாயக்கர் வணக்கத்துக்குரிய கலாநிதி இத்தேபான தம்மாலங்கார தேரர் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்துக்கு அவர் கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார்.

ஞானசார தேரருக்கு மீண்டும் காவி உடை அணிவிக்கும் நிகழ்வை பௌத்த தர்மம் மற்றும் சமய விதிகளுக்கு அமைவாக முன்னெடுக்க வேண்டியுள்ளதாகவும், அதற்கான ஏற்பாடுகளைச் செய்து தமக்கு பொருத்தமான திகதி மற்றும் நேரத்தை அறிவிக்குமாறும் மகாநாயக்க தேரர் அக்கடிதத்தின் மூலம் கோரியுள்ளார்.

குறித்த கடிதத்தின் பிரதியொன்று வெலிக்கடை சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தண்டனை அனுபவித்து வரும் கலகொடஅத்தே ஞானசார தேரரின் காவி உடை அகற்றப்பட்டு நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் கடந்த வாரம் நாட்டில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

இதனைத் தொடர்ந்து, பிக்குகளை காவி உடையுடனேயே நீதிமன்றங்களுக்கு அழைத்து வருவதற்கு ஏதுவாக நீதி அமைச்சு புதிய சட்ட ஏற்பாடுகளை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுத்திருந்தது.

ad

ad