-

9 நவ., 2026

www.pungudutivuswiss.com
ஈரானில் அரசுக்கு எதிராகப் போராட்டம்: 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!
[Sunday 2026-11-08 16:00]

ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது.

ஈரானில், அரசுக்கு எதிரான போராட்டத்தின்போது தாக்குதலில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஈரானில், கடந்த ஜனவரி மாதம் அரசுக்கு எதிராக நடைபெற்ற மாபெரும் போராட்டத்தை அந்நாட்டு அரசு இரும்புக்கரம் கொண்டு அடக்கியது. இதில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்குத் தொடர்ந்து மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது

இந்த நிலையில், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் ஆதரவுடன் ஈரானில் உள்ள கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகவும், அரசுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொண்டதாகவும், குற்றஞ்சாட்டப்பட்ட 3 பேருக்கு இன்று மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குற்றஞ்சாட்டப்பட்ட ஹசன் தியோபண்ட், ஹமீத் காசெமி மற்றும் ரெசா ஸன்கானே ஆகியோர் துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் மற்றும் பெட்ரோல் குண்டுகளை பயன்படுத்தி முக்கிய கட்டமைப்புகள் மீது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுகிறது.

மேலும், அவர்கள் கராஜ் நகரத்திலுள்ள துணை மின் நிலையத்தின் மீது நடத்திய தாக்குதலில் பெரும்பாலான இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக, ஈரானில் தொடர்ந்து ஏராளமான மரண தண்டனைகள் நிறைவேற்றப்படுவது சர்வதேச அளவில் அதிர்வலைகளை உருவாக்கியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக மரண தண்டனை நடவடிக்கைகள் அனைத்தையும் நிறுத்துமாறு ஈரான் அரசுக்கு ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை ஆணையம் வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது

ad

ad