-
18 செப்., 2013
இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கான தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிடும் சி.வி.விக்னேஸ்வரன் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில், ""எங்களது பிரச்சினைகளை தமிழக அரசியல்வாதிகள் டென்னிஸ் பந்துகளைப் போல பயன் படுத்திக்கொள்கிறார்கள். தமிழர் பிரச்சினைக்கு தனி நாடே தீர்வு என தமிழக அரசியல்வாதிகள் குறிப்பிடுவதால் சிங்கள பெரும்பான்மை அரசியல்வாதிகள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
இலங்கை தேசிய அணியில் ஒரே பாடசாலைச் சேர்ந்த 3 தமிழ் மாணவர்கள்
வரலாற்றில் முதல் தடவையாக வட மாகாணத்தை சேர்ந்த ஒரு தமிழ் பாடசாலையில் இருந்து மூன்று மாணவர்கள் இலங்கையின் தேசிய கால்பந்தாட்ட அணியில் இடம்பிடித்துள்ளனர்.
சுவிஸ் தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் சனீஸ்வர வழிபாடு
(புரட்டாதி சனி நாட்கள் )
சுவிட்சர்லாந்து தூண் வரசித்தி விநாயகர் ஆலயத்தில் எதிர்வரும் 21.28 மற்றும் ஒக்ரோபர் 5,12 ஆகிய தினங்களில் இவ்வாலயத்தில் சனீஸ்வர வழிபாடு மிகவும் சிறப்பாக நடைபெற இருப்பாதால் அடியார்கள் சனீஸ்வரனை வேண்டி விரதம் இருந்து சனீஷ்வர தோஷ வழிபாடு செய்து உங்கள் வாழ்வை நலமாக்கி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்
சனீஸ்வர பகவானுக்கு உகந்த தினங்கள் இவை என்பதால் அடியார்கள் அவருக்கு எள்ளெண்ணை தீபம் ஏற்றி கரு நீல (குவளை) மலர்களால் அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் சனீஸ்வர தோஷம் நீங்கப் பெற்று நல்வாழ்வு பெறுவார்கள்
சனீஸ்வர தோஷம் உள்ளவர்கள் -ராசிகள்-நட்சத்திரங்கள்
ஏழரை சனி
கன்னி ராசி (உத்தரம் 2.3.4 ஆம் கால்கள் ,அத்தம் -சித்திரை 1.2 ஆம் கால்கள் )
துலாம் ராசி (சித்திரை 1.2 ஆம் கால்கள் ,சுவாதி ,விசாகம் 1.2 ,3ஆம் கால்கள் )
விருச்சிகம் (விசாகம் 4 ஆம் கால் ,அனுஷம் ,கேட்டை )
அட்டமத்து சனி
மீன ராசி (பூரட்டாதி 4 ஆம் கால் .,உத்தரட்டாதி, ரேவதி )
7 ஆம் இடத்து சனி
மேட ராசி (அஷ்வினி, பரணி. கார்த்திகை 1 ஆம் கால் )
4 ஆம் இடத்து சனி
கடக ராசி ( புனர்பூசம் 4 ஆம் கால், பூசம் ,ஆயிலியம் )
எதிர்காலம் பற்றிய எண்ணங்கள், தனது தனிப்பட்ட அரசியல் பயணம், தமது அமைப்பு கடந்து வந்த பாதை, விடுதலைப் புலிகளுடனான உறவு, 13ஆவது அரசியலமைப்புத் திருத்தம் போன்றவை தொடர்பாக உரையாடுகிறார் தர்மலிங்கம் சித்தார்த்தன்… (தினக்குரல் நாளிதழின் வட மாகாணப் பதிப்பில், 18.09.2013 அன்று வெளியாகிய செவ்வி)
இத்தகையதொரு முக்கியமான கட்டத்தில்தா
சுயாட்சி ஈழமாக மாறும் என்ற பீதியில் தென்னிலங்கை! பல தகவல்களுடன்: கே.வி.தவராசா
சுயாட்சியை ஈழமாக பாற்கும் தென்னிலங்கை அரசு தமிழர்கள் ஒருவகையில் பிரிந்து செல்வதை விரும்புகிறது என சிரேஸ்ர சட்டத்தரணியும் தமிழரசுக் கட்சி கொழும்புக் கிழைத் தலைவருமான கே.வி.தவராசா லங்காசிறி வானெலிக்கு வழங்கிய விசேட செவ்வியில் கூறினார்.
17 செப்., 2013
ஜனாதிபதி மஹிந்தவும் என்றோ ஒருநாள் போர்க் குற்ற விசாரணைக்கு உட்படுவார்; ஏழாலையில் கூட்டமைப்பு எம்.பி சரவணபவன்
மனிதப் படுகொலைகளுக்கு காரணமானவர்கள் எவரும் சர்வதேச விசாரணையில் இருந்து தப்பியதில்லை. இதன் படி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் என்றோ ஒருநாள் சர்வதேச போர்க்குற்ற விசாரணையின் முன் நிற்க வேண்டிவரலாம்.
நரேந்திர மோடியைவிட ஜெயலலிதாவே பிரதமர் பதவிக்கு பொருத்தமானவர் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன் கூறியுள்ளார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்தது. அதில் பேசும்போது, ''இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசிப்படும் ஒரு விஷயம் நரேந்திர மோடி தான். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகத்தான் மோடி அறிவிக்கப்பட்டுள்ளாரே தவிர பிரதமர் ஆகவில்லை.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிதியளிப்பு விழா பொதுக்கூட்டம் திருச்சி மாவட்டம் மணப்பாறையில் நடந்தது. அதில் பேசும்போது, ''இந்தியாவில் தற்போது பரபரப்பாக பேசிப்படும் ஒரு விஷயம் நரேந்திர மோடி தான். பாரதீய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் வேட்பாளராகத்தான் மோடி அறிவிக்கப்பட்டுள்ளாரே தவிர பிரதமர் ஆகவில்லை.
சுயநிர்ணய அடிப்படையில் எமக்கு தீர்வு கிடைக்க வேண்டும் என்று முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பிரதேச பிரசாரக் கூட்டத்தில் இரா.சம்பந்தன் முழக்கம் !!!
த.தே.கூட்டமைப்பு வன்முறை பாதையை ஒருபோதும் விரும்பவில்லை. வன்முறைகளினால் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சுயமரியாதையுடன் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் நியாயமான
த.தே.கூட்டமைப்பு வன்முறை பாதையை ஒருபோதும் விரும்பவில்லை. வன்முறைகளினால் தமிழர்களே அதிகம் பாதிக்கப்படுபவர்கள். சுயமரியாதையுடன் கௌரவமாகவும் சுதந்திரமாகவும் நியாயமான
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முழுமையான வெற்றிக்கு, உலக தமிழர்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் !!!
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி ஒன்றை பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்காதிருக்க கூடாது.
சுரேன் சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
உலக தமிழர் பேரவை
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு பாரிய வெற்றி ஒன்றை பதிவு செய்வது மிகவும் முக்கியமாகும். இந்த நிலையில் புலம்பெயர்ந்த நிலையில் உள்ள இலங்கை தமிழர்கள் தங்களின் உறவினர்கள் நண்பர்களை தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களிக்க வலியுறுத்த வேண்டும். இந்த தேர்தலில் யாரும் வாக்களிக்காதிருக்க கூடாது.
சுரேன் சுரேந்திரன்
ஊடகப் பேச்சாளர்
உலக தமிழர் பேரவை
இலங்கையின் அநேகமான தெற்கு ஊடகங்களில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆயுத போராட்டத்தை கோருவதாக குறிப்பிடப்படுகின்றது. அநேகமான சிங்கள நாளிதழ்களில் இவ்வாறான ஓர் நிலைப்பாட்டை சித்தரிக்கக் கூடிய வகையில் செய்திகள் பிரசுரமாகின்றன.
அரசாங்கத்திற்கு சொந்தமான பத்திரிகைகள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
இதேவேளை, வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வர
அரசாங்கத்திற்கு சொந்தமான பத்திரிகைகள் மட்டுமன்றி தனியார் ஊடகங்களும் இதேவிதமான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளன.
இதேவேளை, வடக்கிற்கு அதிகாரங்கள் வழங்கப்படாவிட்டால் ஆயுதம் ஏந்தி போராட நேரிடும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை முதலமைச்சர் வேட்பாளர் சி.வி. விக்னேஸ்வர
இந்திய சினிமாவின் நூற்றாண்டு விழா வினை மிக பிரமாண்டமாக சென்னையில் நடத்து கிறது தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை (ஃப்லிம் சேம்பர்). ஜனாதிபதி உட்பட தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம் ஆகிய 4 மாநில முதல்வர்களும் கலந்து கொள்வதால் விழாவின் பிரமாண்டம் குறித்து பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் நிலையில் இவ்விழா குறித்த சர்ச்சைகளும் ரெக்கைக் கட்டிப் பறக்கின்றன.
ஈழப்பிரச்சினைகளில் ஆழமான அறிவும் விரிவான பார்வையும் கொண்டவர் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய வர்த்தகத்துறை இணையமைச்சர் சுதர்சனநாச்சியப்பன். சமீபத்தில்,சென்னை விமானநிலையத்தில் பத்திரிகை யாளர்களை சந்தித்த அவர், ""இலங்கை என்பது தமிழர் களின் பூமி.தமிழீழ கனவு அனைவரின் விருப்பம்'' என்று பகிர்ந்திருக்கிறார். சோனியா மற்றும் அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள் மத்தியில் செல்வாக்கு மிக்கவரான நாச்சியப்பனிடமிருந்தே தமிழீழம் குறித்த கருத்து வெளிப்பட்டிருப்பது தமிழ்த்தேசியவாதிகள் மற்றும் ஈழ ஆதரவாளர்களை உற்று கவனிக்க வைத்திருக்கிறது. அதேசமயம்,நாச்சியப்பனின் கருத்தை அறிந்து டெல்லி யும் அதிர்ந்துள்ளது. இந்த நிலையில், சுதர்ச்சன நாச்சியப்பனை தொடர்புகொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.
ஐ.நா அறைகளுக்குள் பதறி ஓடும் இலங்கையின் முன்னாள் தூதுவர் தமரா குணநாயகம்: ச.வி.கிருபாகரன்
கொலைகாரர்களை அழிப்பதற்கு மாகாண சபையை ஆயுதமாக்குங்கள்! ஈழத்தமிழரிடம் ஐ.நா முன்றலில் அறைகூவல்
கூட்டமைப்புக்கு எதிராக எந்த முறைப்பாடும் இல்லை – தேர்தல் ஆணையாளர் |
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கை அரசியலமைப்புக்கு முரணானது என்று, சிறிலங்கா அதிபர் உள்ளிட்ட, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தலைவர்கள் தேர்தல் மேடைகளில் பரப்புரை செய்து வருகின்ற போதிலும், இது தொடர்பாக தேர்தல் ஆணையாளரிடம் எந்த முறைப்பாட்டையும் |
கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக உறவுகளை தூண்டுங்கள்: புலம்பெயர் மக்களுக்கு மாவை அறைகூவல்
வட மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கு தாயக மக்களை உந்துவதற்கு புலம்பெயர் தேசங்களில் உள்ள ஈழத்தமிழ் மக்கள் உதவ வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு எதிராக தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் இன்று உயர்நீதிமன்றத்தில் மனுவொன்றைத் தாக்கல் செய்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் அரசியலமைப்பு சட்டத்திற்கு விரோதமானது என தெரிவித்தே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
ஐ.நா முன்றலில் பெருந்திரளான மக்களுடன் மாபெரும் கவனயீர்ப்பு
ஒரு பலம் வாய்ந்த சர்வதேச சக்தியாக அணிதிரண்டு எமது மக்களின் விடிவுக்காக உலகத் தமிழினம் உரிமைக்குரல் எழுப்பவேண்டும் என்னும் தலைவர் பிரபாகரன் அவர்களின் வார்த்தைக்கு இணங்க பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டு ஐ.நா முன்றலில் இன்று ஒரு கவனயீர்ப்பு போராட்டத்தை நடாத்துகின்றனர்.
16 செப்., 2013
நல்ல உள்ளம் வாழ்க..!நடிகை ஹன்ஸிகா
பிரபலமானவர் நடிகை ஹன்ஸிகா. அடிப்படையில் இவர் ஒரு இந்தி நடிகை. தமிழ் பட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக,நேற்று ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருடன் தாயார் மோனாவும் வந்தார். மோனா, எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்.
பிரபலமானவர் நடிகை ஹன்ஸிகா. அடிப்படையில் இவர் ஒரு இந்தி நடிகை. தமிழ் பட படப்பிடிப்பு மதுரையில் நடைபெறுகிறது. அதில் கலந்துகொள்வதற்காக,நேற்று ஹன்சிகா மோத்வானி மும்பையில் இருந்து விமானம் மூலம் மதுரைக்கு வந்தார். அவருடன் தாயார் மோனாவும் வந்தார். மோனா, எம்.பி.பி.எஸ். படித்த டாக்டர்.
வாக்கு கொள்ளை இடம்பெறாவிட்டால் வடக்கில் கூட்டமைப்பு அமோக வெற்றிபெறும்!- சுனந்த தேசப்பிரிய
வட மாகாண சபை தேர்தலில் வாக்குகள் கொள்ளை இடம்பெறாவிட்டால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வெற்றி பெறுவது உறுதியாகிவிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வட மாகாணத்திலுள்ள ஐந்து மாவட்டங்களிலும் இப்போது வெற்றி பெறும் என்பதை காணக்கூடியதாகவுள்ளது.
வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்களை சந்தித்த சுமந்திரன், தவராசா!- சர்வதேச கண்காணிப்பாளர்களின் பணி வட மாகாணத்தில் இன்று ஆரம்பம்
நடைபெறவுள்ள மாகாணசபைத் தேர்தல்களின் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ள தெற்காசிய தேர்தல்கள் கண்காணிப்பாளர்கள் 21 பேரும் இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் ஆணையாளர் கோபாலசுவாமி தலைமையில் மாகாண சபைத் தேர்தல்களில்
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?
ஆந்திராக்காரர்கள் போல் நாங்களும் சினிமா நூற்றாண்டு விழாவில்
பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? : பாரதிராஜா
பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா? : பாரதிராஜா
சேரன் இயக்கும் புதிய படம் ‘ஜே.கே.எனும் நண்பனின் வாழ்க்கை’. அதில் கதாநாயகனாக சர்வானந்த், நாயகியாக நித்யாமேனன் நடிக்கிறார்கள். படத்தின் பாடல் சி.டி. வெளியிட்டு விழா சத்யம் தியேட்டரில் இன்று காலை நடந்தது.
இயக்குநர்கள் பாரதிராஜா, பாலுமகேந்திரா, ஆர்.பார்த்திபன், ஷங்கர், சீமான், அமீர், கேயார், சமுத்திரக்கனி, சசி, பாண்டியராஜன், உட்பட பல இயக்குநர்கள் இவ்விழாவில் பங்கேற்றனர். நடிகர்கள் சரத்குமார், சூர்யா, சர்வானந்த், நடிகைகள் சினேகா, ரோகிணி, நித்யாமேனன் மற்றும் தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் விழாவில் பங்கேற்றனர்.
விழாவில் சேரனின் மகள்கள் நிவேதா, தாமினி கலந்து கொண்டனர். விழாவுக்கு வந்தவர்களை தாமினி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
இவ்விழாவில் பாரதிராஜா பேசியபோது, ‘’ சினிமா நூற்றாண்டு விழா கொண்டாடப்படுகிறது. தெலுங்கானா பிரச்சனையில் தத்தளித்துக் கொண்டு இருக்கும்போது இந்த விழாவில் எப்படி பங்கேற்போம் என்று ஆந்திராக்காரர்கள் சொல்கிறார்கள். நமக்கும் பிரச்சனைகள் உள்ளன.
ஈழத்தமிழர்கள் குண்டு வீசி கொல்லப்பட்டுள்ளனர். காவிரிக்காக முல்லை பெரி யாறுக்காக, கச்சத்தீவுக்காக போராடுகிறோம். நாங்களும் தத்தளித்துக் கொண்டு இருப்பதால் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க முடியாது என்று சொல்ல முடியுமா?
தமிழ் சினிமாவுக்கு தனி சங்கங்கள் வேண்டும். தென் இந்திய திரைப்பட வர்த்தகசபை, தென் இந்திய நடிகர் சங்கம் என்பதை விட்டு விட்டு தமிழ் நடிகர் சங்கம், தமிழ் வர்த்தகர் சபை தமிழ் திரைப்பட தொழிலாளர் சங்கம் என்று வரவேண்டும். அப்போது தான் நம் உரிமைகள் காக்கப் படும்’’என்றார்.
14 செப்., 2013
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல்
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி
தென்மராட்சியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் மீது மேற்கொள்ளபட்ட மோசமான தாக்குதல்
சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் உட்பட இருவர் படுகாயமடைந்துள்ளனர். வெள்ளை வாகனத்தில் வந்திறங்கிய கும்பலொன்று சிங்களத்தில் கத்தியவாறு இரும்புக் கம்பிகளுடன் ஓடிவந்து தமது வாகனத்தை இடைமறித்து தாக்கியதாகவும் தாங்கள் பாதுகாப்பு தேடி ஒடியதால் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாகவும் காயடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் ஐந்து மணியளவில் நாவற்குழியில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபைத் தேர்தல் வேட்பாளர் ஒருவருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டவர்கள் மீதே இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்ட சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் ஞா.கிஸோர் (வயது-24), மற்றும் நுணாவில் கிழக்கைச் சேர்ந்த ஆர்.றஜிந்தன் (வயது-19) ஆகியோரே காயமடைந்து சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்த தாக்குதல் தொடர்பில் மேலும்
இலங்கைக்கு எதிராக சர்வதேச விசாரணைகளை கோரும் யோசனை முன்வைக்கப்பட உள்ளது?
இலங்கையில் யுத்தம் நடைபெற்ற போது இடம்பெற்றதாக கூறப்படும் மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற யோசனை ஒன்று ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக ராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச விசாரணையை கோரும் இந்த யோசனை எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளை இந்த யோசனையுடன் சம்பந்தப்பட்ட சில விடயங்களை எதிர்வரும் 25 ஆம் திகதி ஆணைக்குழுவின் கூட்டத்தில் முன்வைக்க உள்ள வாய்மொழி மூலமான அறிக்கையில் வெளியிட தயாராக இருப்பதாக தெரியவருகிறது.
அதேவேளை சர்வதேச விசாரணையை கோரும் குறித்த யோசனை அமெரிக்கா மற்றும் மேற்குலக நாடுகளின் உதவியுடன் முன்வைக்கப்பட உள்ளதாகவும் அதற்கு மனித உரிமை ஆணையாளர் நவநீதம்பிள்ளையும் பூரண ஆதரவை வழங்குவார் என்றும் ராஜதந்திர வட்டாரங்களின் அந்த தகவல்கள் கூறியுள்ளன.
இலங்கைக்கு எதிராக கடந்த மனித உரிமை ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்ட யோசனையின் தொடர்ச்சியாக இருந்த யோசனை முன்வைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
23 வருடங்களின் பின் யாழ்தேவி இன்று கிளிநொச்சி செல்கிறது! ஜனாதிபதியும் பயணிக்கிறார்
ஓமந்தையிலிருந்து கிளிநொச்சி வரையிலான ரயில் சேவை, கிளிநொச்சி ரயில் நிலையம், சுன்னாகம் உப மின் உற்பத்தி நிலையம் உள்ளிட்டவற்றை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச இன்று ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இன்று காலை 9.30 மணிக்கு ஓமந்தை ரயில் நிலையத்திலிருந்து ரயில் மூலம் கிளிநொச்சி ரயில் நிலையத்தைச் சென்றடையும் ஜனாதிபதி அவர்கள், ரயில் நிலையத்தைத் திறந்து வைக்கவுள்ளார்.
அதனைத் தொடர்ந்து ரயில் நிலையத்திற்கு அருகில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் பொதுக் கூட்டத்திலும் அவர்
கிளிநொச்சியை அழிப்பதில் ஈபிடிபி கங்கணங்கட்டி அலைகிறது! அதற்கு எம் தலைமைகள் அனுமதிக்காது: பசுபதிப்பிள்ளை காட்டம்
கிளிநொச்சியின் அபிவிருத்தி என்பது பிரதானம், அதனை ஈபிடிபி தடுத்து பித்தலாட்டம் செய்கிறது. இது அரசின் பணமல்ல, உலக நாடுகளுடையது என தனது மண்ணிற்கு ஏற்பட்ட அநீதியை லங்காசிறி FMக்கு வழங்கிய செவ்வியில் உணர்வுடன் உச்சரிக்கிறார் கிளிநொச்சி மாவட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வேட்பாளரும் முன்னாள் கிராமசேவையாளருமான திரு.சு.பசுபதிப்பிள்ளை.
விடுதலைக்கேங்கும் மக்கள் கருத்தால் முரசறையும் போர்க்களம்!
மாவை சேனாதி அவர்களின் முகநூலில் இருந்து
முள்ளிவாய்க்காலில், தமிழ் மக்களை கொத்துக்கொத்தாய்க் கொன்று குவித்து, ஒரு இனஅழிப்பை நடத்தி முடித்த சிங்களம், அழித்துச் சிதைக்கப்பட்ட தமிழினம், சிங்களத்தின் ஆட்சியதிகாரத்துக்குக் கட்டுப்பட்டு, கீழ்ப்பட்டு நிற்கும் ஒரு புதியதொரு காலத்தையே எதிர்பார்த்து நின்றது.ஆனால், சிங்களத்தின்
தம்புள்ளை பள்ளிவாசலை இடிப்பது மற்றும் அகற்றுவது சம்பந்தமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் பற்றி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினதும் அரசாங்கத்தினதும் கவனத்திற்கு கொண்டுவருவதாக நீதியமைச்சரும், முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவ+ப் ஹக்கீம் தெரிவித்தார்.
இந்த பள்ளிவாசல் உடைக்கப்படமாட்டாதென்று ஜனாதிபதி கடந்த கிழக்கு மாகாண சபைத் தேர்தலின் போது கல்முனையில் பகிரங்கமாக அறிவித்ததையும் அமைச்சர் ஹக்கீம்
வெற்றிலை சின்னத்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும், கோவில்களையும், கிறிஸ்தவ தேவாலயங்களையும், பள்ளிவாசல்களையும் உடைத்து நொறுக்கும் மதவாதத்துக்கு அளிக்கும் வாக்குகள் என்பதை மலையகத்தில் வாழும் ஒவ்வொரு தமிழ் பேசும் இந்து, இஸ்லாமிய, கத்தோலிக்க மத சிறுபான்மை வாக்காளர்களும் மனதில் கொள்ள வேண்டும்.மனோ கணேசன்
வெற்றிலை என்பது நம்மை பொறுத்தவரையில் வாயில் மென்று துப்பும் வெற்று இலைதான். அதற்கு மேல் அது நமக்கு பயன்தராது.
வெற்றிலை என்பது நம்மை பொறுத்தவரையில் வாயில் மென்று துப்பும் வெற்று இலைதான். அதற்கு மேல் அது நமக்கு பயன்தராது.
அனைத்துலக விசாரணையை எதிர்கொள்ள நேரிடும்; சிறிலங்காவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
பொறுப்புக்கூறல் விவகாரங்களுக்கு சிறிலங்கா உள்ளக செயல்முறைகளின் மூலம் பதிலளிக்கத் தவறினால், அனைத்துலக செயல்முறைகளை நோக்கிய அழுத்தங்கள் அதிகரிக்கும் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது.
மோடி வெற்றிபெறுவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது: ராம்ஜெத்மலானி
பாஜக பிரதமர் பதவி வேட்பாளராக நரேந்திரமோடி அறிவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு கட்சியின் மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
நரேந்திர மோடிக்கு ராம்ஜெத்மலானியும் வாழ்த்து தெரிவித்துள்ளார். நரேந்திரமோடி வெற்றிபெறுவதை இந்த உலகம் பார்க்கத்தான் போகிறது. இந்தியா இழந்துவிட்ட பெருமையை மோடி மீட்டெடுப்பார் என்று கூறியுள்ளார்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)