புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 மே, 2016

அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்பட 5 நாடுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார் பிரதமர் மோடி

ஜுன் 4 முதல் அமெரிக்கா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட 5 நாடுகளுக்கு பிரதமர் நரேந்திர மோடி சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். 

முதலில் ஆப்கானிஸ்தான் செல்லும் அவர், இந்தியாவால் 1400 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள சல்மா அணையை அர்ப்பணிக்கிறார். பின்னர் கத்தார் நாட்டுக்கு செல்லும் அவர் இரண்டு நாட்கள் அங்கு தங்குகிறார். அந்நாட்டுன் வர்த்த தொடர்பை வலுப்படுத்துவது தொடர்பாகவும், எரிபொருள் வர்த்தகம் குறித்தும் கத்தார் மன்னருடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். பின்னர் சுட்சர்லாந்து செல்லும் மோடி, கறுப்புப் பண விவகாரம் தொடர்பாக பேச்சு நடத்த உள்ளார். அதனைத் தொடர்ந்து அமெரிக்கா செல்லும் மோடி, அதிபர் ஒபாமா அளிக்கும் விருந்தில் பங்கேற்கிறார். அந்நாட்டு பாராளுமன்றத்திலும் உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து மெக்சிகோ சென்றுவிட்டு இந்தியா திரும்புகிறார்

ad

ad