புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

29 செப்., 2016

மலேஷிய விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யா

மலேஷியநாட்டு விமானத்தை சுட்டு வீழ்த்தியது ரஷ்யாவின் ஏவுகணை என்று நெதர்லாந்து விசாரணையில் தெரிய
வந்துள்ளதாக அந்நாட்டு விசாரணை குழு அறிவித்துள்ளது.
கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் 17ம் தேதி மலேஷியாவில் இருந்து நெதர்லாந்துக்கு சென்ற மலேஷியன் ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 உக்ரைன் பகுதியில் பறந்தபோது சுட்டு வீழ்த்தப்பட்டது. இப்பகுதியில் ரஷ்ய ஆதரவாளர்கள் இருக்கும் பகுதியாகும். அந்த விமானத்தில் இருந்த 283 பயணிகள் இறந்து போனார்கள். மேலும் அவ்விமானத்தில் இருந்த 15 பணியாளர்களும் சேர்த்து 298பேர் பலியானார்கள்.
இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்த நெதர்லாந்து தற்போது விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மலேஷியன் விமானம் எம்எச்17 பறந்து கொண்டிருந்தபோது ரஷ்யாவின் தயாரிப்பான பக் ரக ஏவுகணை கொண்டு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.ரஷ்ய எல்லையில் இருந்து ஏவுகணை தளவாடம் உக்ரைன் கிழக்கு பகுதிக்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து அந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.பின்னர் ஏவுகணைத்தளவாடம் மீண்டும் ரஷ்யாவுக்கே கொண்டு செல்லப்பட்டதும் தெரியவந்துள்ளது.
இவ்வாறு நெதர்லாந்தின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

ad

ad