புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 அக்., 2018

ஆனையிறவைக் கடந்தது மாணவர்களின் நடைபயணம்

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் முன்னெடுக்கும் அநுராதபுரம் வரையிலான
கவனயீர்ப்பு நடைபயணம் தற்போது ஆனையிறவைக் கடந்து பண்பாட்டு தலைநகரான கிளிநொச்சியினை நோக்கிய பயணிப்பதாக தெரியவந்துள்ளது.
பல்கலைக்கழக மாணவர்களின் நடைபயணத்தின் இரண்டாம் நாள் பயணம் இன்று காலை இயக்கச்சியிலிருந்து ஆரம்பகமாகியிருந்தது. மாணவர்களுடன் இணைந்து பயணத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலளர் செல்வராஜா கஜேந்திரன்  தொடர்ச்சியாக ஈடுபட்டுள்ளார். அவருடன் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் இணைந்துள்ளனர்.
இந்நிலையில் சில மணிநேரத்தில் கிளிநொச்சியை சென்றடைந்ததும் மாணவர்கள் உள்ளிட்ட மேலும் பலர் நடைபயணத்தில் இணையவுள்ளதாக தெரியவந்துள்ளது.

ad

ad