புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 மார்., 2021

சுவிஸ் தூதரக ஊழியருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

www.pungudutivuswiss.com
கடத்தப்பட்டதாக கூறி, பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார் என்று இலங்கையில் உள்ள சுவிஸ் தூதரக ஊழியர் கானியார் பெனிஸ்டர் பிரான்ஸிஸ்ஸிற்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்று குற்றப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள சுவிஸ் தூதரகம், 2019 நவம்பர் மாதம் தங்கள் ஊழியர் கானியர் பெனிஸ்டர் கடத்தப்பட்டு அவரது விருப்பத்திற்கு எதிராக தடுத்து வைக்கப்பட்டதாகவும், தூதரகம் தொடர்பான தகவல்களை வெளியிடுமாறு அச்சுறுத்தியதாகவும் அரசாங்கத்திடம் முறைப்பாடு அளித்தது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னர் சுவிஸ் தூதரக ஊழியர்களின் குற்றச்சாட்டுகளானது ஆதாரமற்றது என கண்டறியப்பட்டதுடன், கனியா பெனிஸ்டர் 2019 டிசம்பர் 16 இல் கைது செய்யப்பட்டு, பின்னர் டிசம்பர் 30 பிணையில் விடுவிக்கப்பட்டமையும் குறிப்பிடத்கத்கது.

ad

ad