புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 ஜூன், 2021

தளர்த்தப்பட்டுள்ளபயணக்கட்டுப்பாடுதொடர்பில்முக்கியஅறிவிப்பு

www.pungudutivuswiss.comதளர்த்தப்பட்டுள்ளபயணக்கட்டுப்பாடுதொடர்பில்முக்கியஅறிவிப்பு

நாடளாவிய ரீதியில் அமுல்ப்படுத்தப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடு நேற்று அதிகாலை முதல் நீக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் வார இறுதி நாட்களான இன்று சனிக்கிழமை மற்றும் நாளை ஞாயிற்றுக்கிழமையும் மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்துகொள்ளும் வகையில் பயணத்தடை அமுல்லப்படுத்தப்படவில்லை எனவும் இரணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

ஆகவே வார இறுதி நாட்களில் கடைகள் உட்பட சனநெரிசலான இடங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறு இராணுவத் தளபதி சவேந்திர சில்வா பொதுமக்களிடம் கேட்டுகொண்டுள்ளார்.

தென்னிலங்கை ஊடகம் ஒன்றுக்கு இன்று வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இந்த கோரிக்கையை முன்வைத்தார்.

தொடர்ந்தும் தெரிவித்த அவர்,

கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டாலும் மாகாணங்களுக்கு இடையேயான பயணக் கட்டுப்பாடுகள் தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே நாட்டில் கொரோனா தொற்று பரவுவதைக் கட்டுப்படுத்த பொது மக்களின் ஆதரவு மிகவும் அவசியமானது என்றும் இதேவேளை, கேகாலை மாவட்டத்தின் 2 கிராம சேவகர் பிரிவுகள் இன்று காலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் அல்கொட கிராம சேவகர் பிரிவுக்குட்பட்ட ஹிகுலோய, மஹவத்த, ஹலமட ஆகிய பகுதிகளும் டென்ஸ்வோர்த் தோட்ட கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத்தளபதி அறிவித்துள்ளார்

ad

ad