புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

12 ஆக., 2021

பிரதம செயலாளருக்கு கொரோனா! - வடக்கு மாகாண சபைக்குள் புதிய கொத்தணி?

www.pungudutivuswiss.com
வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துலசேன மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட நிலையில், அவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை வடமாகாண முன்னாள் பிரதம செயலாளர் பத்திநாதனின் பிரியாவிடை வைபவம் கடந்த சனிக்கிழமை நடைபெற்றது.

அதில் தற்போதைய பிரதம செயலாளர் உட்பட பல உயர் அதிகாரிகள் கலந்து கொண்டுள்ளனர். அவர்களில் சிலருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் நிர்வாக தேவைகள் நிமித்தம் வடமாகாண அமைச்சுக்களின் அதிகாரிகள் , திணைக்கள அதிகாரிகள் பலரும் பிரதம செயலாளருடன் தொடர்பினை கொண்டு இருந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ad

ad