புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 டிச., 2021

கன்னா பின்னா என்று ஓடும் PPT பஸ்: கொழும்பில் இருந்து வந்து விபத்து 1வர் பலி பலர் காயம்

www.pungudutivuswiss.com
கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் சொகுசு பேருந்து, மதவாச்சிக்கும் இகிரிகொல்லாவக்கும் இடைப்பட்ட வளைவில் 145 வது மைல் கல்லிற்கு அருகில் உள்ள வளைவில் பஸ் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தின் போது பஸ் உருண்டு அருகில் உள்ள வயலுக்குள் பாய்ந்துள்ளது. இதன்போது பஸ்ஸில் பயணித்த பலர் படுகாயமடைந்துள்ளதுடன் ஒருவர் பலியாகியுள்ளார் என அதிர்வு இணையம் அறிகிறது. இச்சம்பவம் இன்று அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. காயமடைந்தவர்கள் ரம்பேவ மற்றும் அனுராதபுரம் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் . இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

ad

ad