புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 நவ., 2022

ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக்...! வில்லியம்சன் அதிரடி...! அயர்லாந்துக்கு 186 ரன்கள் இலக்கு நிர்ணயித்த நியூசிலாந்து

www.pungudutivuswiss.com
யூசிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் அயர்லாந்து வீரர் ஜோசுவா லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அசத்தினார். அடிலெய்டு, 8-வது 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்றுக்கு வந்துள்ள 12 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். இதன் முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு முன்னேறும். இன்னும் 6 லீக் ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில் இன்னும் எந்த அணியும் அரைஇறுதியை எட்டவில்லை. இந்த நிலையில் தொடரில் இன்று குரூப்1-ல் முக்கியமான இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது. இதில் அடிலெய்டில் இந்திய நேரப்படி காலை 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டம் ஒன்றில் நியூசிலாந்து-அயர்லாந்து அணிகள் விளையாடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற அயர்லாந்து அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. அதன்படி நியூசிலாந்து அணியின் தொடக்க ஆட்டக்காரகளாக பின் ஆலென் மற்றும் டேவான் கான்வே ஆகியோர் களம் இறங்கினர். இதில் தொடக்கம் முதலே அதிரடியாக ஆடிய பின் ஆலென் 18 பந்துகளில் 32 ரன்கள் குவித்து அவுட் ஆனார். இதையடுத்து கேப்டன் வில்லியம்சன் களம் புகுந்தார். Also Read - ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் பதவியிலிருந்து முகமது நபி விலகல் இதற்கிடையில் மற்றொரு தொடக்க ஆட்டக்காரர் கான்வே 28 ரன்னுக்கும், அடுத்து வந்த அதிரடி ஆட்டக்காரர் பிலிப்ஸ் 17 ரன்னுக்கும் அவுட் ஆகினர். இதையடுத்து கேப்டன் வில்லியம்சனுடன் டேரில் மிட்செல் ஜோடி சேர்ந்தார். பொறுமையாக ஆடுகிறார் என விமர்சனங்கள் எழுந்த கேப்டன் வில்லியம்சன் இந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்தார். அவர் 35 பந்துகளில் 61 ரன்கள் எடுத்திருந்த நிலையில் லிட்டில் பந்துவீச்சில் கேட்ச் ஆனார். இதையடுத்து களம் புகுந்த நீஷம் முதல் பந்திலேயே எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். 2 பந்துகளில் 2 விக்கெட் எடுத்து அசத்திய லிட்டில் ஹாட்ரிக் விக்கெட் எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஹாட்ரிக் பந்தை எதிர்கொள்ள வந்த சாண்ட்னெரும் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டம் இழந்தார். இதனால் லிட்டில் ஷாட்ரிக் விக்கெட் எடுத்து அசத்தினார். இறுதியில் நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் குவித்தது. அந்த அணி தரப்பில் வில்லியம்சன் 61 ரன்கள் அடித்தார். அயர்லாந்து அணி தரப்பில் லிட்டில் 3 விக்கெட்டும், டெலனி 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து 186 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் அயர்லாந்து ஆட உள்ளது.

ad

ad