புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

21 ஜன., 2023

மன்னாரில் 16 கட்சிகள், 3 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம்!

www.pungudutivuswiss.com


மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன.

மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களில் போட்டியிட 16 கட்சிகளும் 3 சுயேட்சைக் குழுக்களும் தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளன

ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சி ஆகியவை இணைந்து மன்னார் மாவட்டத்தில் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் போட்டியிடுகின்றன.

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் இன்றைய தினம் காலை மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்குமான கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளார்.

இதேவேளை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி மன்னார் மாவட்டத்தில் உள்ள 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணத்தை இன்று செலுத்தியுள்ளது.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாரூக் தலைமையில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை ஈ.பி.டி.பி கட்சியானது மன்னார் மாவட்டத்தில் 2 உள்ளூராட்சி மன்றங்களுக்கு தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளது.

மன்னார் மாவட்டத்தில் மன்னார் நகர சபை, மன்னார், நானாட்டான், முசலி, மாந்தை மேற்கு ஆகிய பிரதேச சபைகள் உள்ளடங்களாக 5 உள்ளூராட்சி மன்றங்களுக்கான கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

மன்னார் நகரசபைக்கு 10 கட்சிகளும்,1 சுயேட்சைக் குழு உள்ளடங்களாக 11 பேரும், மன்னார் பிரதேச சபைக்கு 8 கட்சிகளும், 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 9 பேரும், நானாட்டான் பிரதேச சபைக்கு 12 கட்சிகளும், மாந்தை மேற்கு பிரதேச சபைக்கு 9 கட்சிகளும், முசலி பிரதேச சபைக்கு 12 கட்சிகளும் 1 சுயேட்சைக்குழு உள்ளடங்களாக 13 பேர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்

ad

ad