புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 ஜன., 2023

படகில் ரியூனியன் தீவு சென்றவர்கள் நாடு கடத்தப்பட்டனர்!

www.pungudutivuswiss.com


ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

ரீயூனியன்தீவில் கைதுசெய்யப்பட்ட இலங்கையை சேர்ந்த 38 சட்டவிரோத குடியேற்றவாசிகள் இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளனர். கடல்வழியாக ரீயூனியன் தீவிற்கு செல்ல முயன்ற 38 இலங்கையர்கள் 14ம் திகதி கைதுசெய்யப்பட்டனர்.

டிசம்பர் முதலாம் திகதி நீர்கொழும்பு துறைமுகத்திலிருந்து மீன்பிடி படகொன்று ஐந்து பேருடன் புறப்பட்டதாகவும் இதன் பின்னர் 13 -14ம் திகதிகளில் புத்தளத்திலிருந்து 64 குடியேற்றவாசிகள் படகில் ஏற்றப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனை தொடர்ந்து குறிப்பிட்ட படகு டியோகார்சியாவை நோக்கி புறப்பட்டுள்ளது,அங்கு இவர்களை 30 ம் திகதி பிரிட்டனின் கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

எனினும் ஆள்கடத்தல்கள்காரர்கள் சட்டவிரோத குடியேற்றவாசிகள் குழுவொன்றுடன் ரீயூனியன் தீவிற்கு சென்றுள்ளனர், அங்கு இவர்களை அதிகாரிகள் 14 ம் திகதி கைதுசெய்துள்ளனர்.

இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்த பின்னர் அதிகாரிகள் இலங்கைக்கு நாடு கடத்தியுள்ளனர். இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டவர்கள் சிஐடியினரிடம் விசாரணைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கல்பிட்டி கண்டியை சேர்ந்த ஆள்கடத்தல்காரர்கள் தலா 400,000 முதல் 1000 00 வரை பெற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ad

ad