புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

10 செப்., 2023

மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,037 ஆக உயர்வு

www.pungudutivuswiss.com
மொராக்கோவைத் தாக்கிய சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்களின்
 எண்ணிக்கை 1,037 ஆக உயர்ந்துள்ளது. ரபட், வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள
 நாடு மொராக்கோ. இந்நாட்டில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. அந்நாட்டு நேரப்படி இரவு 11.11 மணிக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் அந்நாட்டின் மாரகேஷ், அல்-ஹவுஸ், அஷிலால், சிஷவ், டரொண்ட் ஆகிய நகரங்களில் நிலநடுக்கம் உணரப்பட்டது. குறிப்பாக மாரகேஷ் நகர் நிலநடுக்கத்தால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. Also Read - துருக்கியில் இறுதி ஊர்வலத்துக்குள் லாரி புகுந்து 5 பேர் பலி நிலநடுக்கத்தால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. இரவு நேரம் என்பதால் மக்கள் வீடுகளில் உறங்கிக்கொண்டிருந்த நிலையில் கட்டிடங்கள் இடிந்து இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். Also Read - அமெரிக்க மாகாணத்தில் துப்பாக்கிக்கு தடை இந்நிலையில், மொராக்கோ நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 1,037 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும் 1,204 பேர் காயமடைந்துள்ளதாகவும் சமீபத்திய புதுப்பிப்புகள் தெரிவிக்கின்றன. Also Read - சூடான் உள்நாட்டு போரால் 78 ஆயிரம் பேர் எத்தியோப்பியாவில் தஞ்சம் - ஐ.நா. அறிக்கை நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் இடிந்து விழுந்த நிலையில் பலர் இடிபாடுகளுக்குள் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நிலநடுக்கம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.

ad

ad