புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

5 செப்., 2023

ஆசிய கோப்பை: ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி இலங்கை திரில் வெற்றி...! - அடுத்த சுற்றுக்குள் நுழைந்தது.

www.pungudutivuswiss.com
ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்திய இலங்கை சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. லாகூர், ஆசிய கோப்பை தொடரின் 6வது லீக் 
ஆட்டம் இன்று பாகிஸ்தானின் லாகூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இலங்கை - ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை 8 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்கள் எடுத்தது. இலங்கை அணியின் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 92 ரன்கள் குவித்தார். Also Read - இந்திய ஜெர்சியில் 'இந்தியா' என்பதற்குப் பதிலாக 'பாரத்'; பிசிசிஐ-க்கு வீரேந்திர சேவாக் கோரிக்கை இதனை தொடர்ந்து 292 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆப்கானிஸ்தான் அணி களமிறங்கியது. ரன் ரேட் அடிப்படையில் ஆப்கானிஸ்தான் அணி 37.1 ஓவரில் வெற்றி இலக்கான 292 ரன்களை எடுத்தால் சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையலாம். ஆப்கானிஸ்தான் நிர்ணயிக்கப்பட்ட ஓவரில் வெற்றி இலக்கை எட்டவில்லை என்றால் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழையும். Also Read - உலகக்கோப்பை தொடருக்கான தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு...!! இந்த இக்கட்டான சூழ்நிலையில் இரு அணிகளும் ஆடின. ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி அதிரடியாக ஆடி 65 ரன்கள் குவித்தார். இறுதியில் ஆப்கானிஸ்தான் 37.4 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 289 ரன்கள் எடுத்தது. Also Read - "என்னிடம் இதுபோன்ற கேள்விகளைக் கேட்காதீர்கள்...": நிதானத்தை இழந்த ரோகித் சர்மா இதன் மூலம் ஆப்கானிஸ்தானை 2 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தில் இலங்கை திரில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி சூப்பர் 4 சுற்றுக்குள் நுழைந்தது. அதேவேளை, இலங்கையுடனான தோல்வியையடுத்து ஆசிய கோப்பை தொடரில் இருந்து ஆப்கானிஸ்தான் வெளியேறியது.

ad

ad