புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

4 செப்., 2023

பிக் பாஸில் 7ல் கொண்டுவந்த புது விஷயங்கள்!

www.pungudutivuswiss.com

சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கப்படும் என சொல்லப்படுகிறது முன்பு சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தான் துவங்குவதாக இருந்தது.  ஆனால் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது.

சின்னத்திரை ரசிகர்களுக்கு இஷ்டமான என்டர்டைன்மென்ட் ஷோ பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் செப்டம்பர் 24ஆம் தேதி துவங்கப்படும் என சொல்லப்படுகிறது முன்பு சீசன் 7 நிகழ்ச்சி அக்டோபர் மாதத்தில் தான் துவங்குவதாக இருந்தது. ஆனால் கிரிக்கெட் உலகக் கோப்பை போட்டி அக்டோபர் மாதத்தில் துவங்க இருக்கிறது

அதனால் தான் இப்போது செப்டம்பர் மாதத்திலேயே பிக் பாஸ் நிகழ்ச்சி நடத்தப் போகிறார்களாம். மேலும் இந்த சீசனில் கூடுதல் விறுவிறுப்பை ஏற்படுத்த வேண்டும் என கமல் இடம்பெற்றுள்ள அடுத்தடுத்த ப்ரோமோ வெளியாகி ரசிகர்களை ஆச்சிரத்தில் வாழ்த்தியுள்ளது.

ஏனென்றால் மற்ற சீசன்களை காட்டிலும் இந்த சீசனில் புது புது விஷயங்களை அறிமுகப்படுத்தி நிகழ்ச்சியில் கூடுதல் சுவாரசியத்தை ஏற்படுத்துகின்றனர். இந்த சமயத்தை சரியாக பயன்படுத்தி கமலும் தன்னுடைய கஜானாவை நிரப்பி விட்டார்.

ஏனென்றால் கடந்த சீசனில் கமலுக்கு 75 கோடி சம்பளமாக கொடுக்கப்பட்டது. ஆனால் இப்போது பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக 130 கோடியை சம்பளமாக பெற்றுள்ளார். அது மட்டுமல்ல இந்த முறை பிக் பாஸ் சீசன் 7ல் இரண்டு வீடுகள் இருக்கப்போகிறது.

20 போட்டியாளர்கள் பங்கேற்கும் இந்த சீசனில் போட்டியாளர்களை இரண்டு வீட்டில் எப்படி பிரித்து விளையாட விடப் போகின்றனர் என்றும் ரசிகர்களை யோசிக்க வைத்துள்ளனர். இந்த முறை நடந்து முடிந்த சீசன்களில் இருக்கும் போட்டியாளர்களும் புதிய போட்டியாளர்களும் இணைந்து கலந்து கொள்ளப் போகின்றனர்.

ஒரு வீட்டில் பழைய போட்டியாளர்களையும், புது வீட்டில் புது போட்டியாளர்களையும்வைக்கப் போகிறார்களாம். மேலும் இந்த சீசனில் பரபரப்பு கூட்டக்கூடிய பழைய போட்டியாளர்களையும் சுவாரசிய மிகுந்த புதிய போட்டியாளர்களையும் தேர்ந்தெடுக்க போகின்றனர். இனிவரும் நாட்களில் போட்டியாளர்களை குறித்த இனிவரும் நாட்களில் போட்டியாளர்களை குறித்த வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad