புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

20 பிப்., 2025

ரயிலில் மோதிய யானைக்கூட்டம் - 05 யானைகள் உயிரிழப்பு ; மட்டக்களப்புக்கான ரெயில் சேவைகள் பாதிப்பு

www.pungudutivuswiss.com
கல்ஓயா பகுதியில் மீனகாய கடுகதி ரயிலில் யானைக் கூட்டம்
மோதியதால் மட்டக்களப்பு மார்க்கத்தின் ரயில் போக்குவரத்து
பாதிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பிலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் இன்று (20) அதிகாலை யானைக் கூட்டம் ஒன்று மோதியதில் ரயில் தடம் புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இந்த விபத்தில் ஐந்து காட்டு யானைகள் இறந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதன் காரணமாக, மட்டக்களப்பு மார்க்கத்தில் ரயில் சேவைகள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும், மட்டக்களப்பிலிருந்து கொழும்புக்கு இயக்கப்படவிருந்த புலதிசி ரயிலை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
தடம் புரண்ட ரயிலின் இயந்திரத்தை மீள் தடமேற்றுவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

ad

ad