............................
கெஹெலிய ரம்புக்வெல்ல ( முன்னாள் அமைச்சர் )கைது
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல
இன்று (18) இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணையத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணை தொடர்பாக வாக்குமூலம் வழங்குவதற்காக ரம்புக்வெல்ல இன்று காலை இலஞ்ச ஆணையத்திற்கு சென்றிருந்த நிலையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் அனுமதிக்கப்பட்ட ஊழியர்களை விட கூடுதலாக 6 ஊழியர்களை பணிக்கமர்த்தி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாக கெஹெலிய ரம்புக்வெல்ல மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சற்றுமுன்னர் (18) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.
தற்போது இடம்பெற்று வரும் விசாரணையொன்று தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே அவர் இவ்வாறு முன்னிலையாகியுள்ளார்.
இதேவேளை, 2020 ஆம் ஆண்டு ஒகஸ்ட் மாதம் 13 ஆம் திகதி முதல் 2024 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி வரையான காலப்பகுதியில், கெஹலிய ரம்புக்வெல்ல ஊடக, சுகாதார மற்றும் சுற்றாடல் அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில் முறையற்ற வகையில் சொத்துக்களை ஈட்டியதாக நிதி தூய்தாக்கல் தடுப்புச் சட்டத்தின் கீழ் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் பிரதிவாதிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.