சிலை அகற்றம் : யாழ். நல்லூரில் ''அணையா விளக்குப் போராட்டம்
அதற்கமைய இன்று (30.09.2026) முதல் வெள்ளிக்கிழமை (02) வரை யாழ். நல்லூரில் 'அணையா விளக்குப் போராட்டம்' முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை திலீபனின் சிலையை காவல்துறையினர் அகற்றியதைக் கண்டித்து கடந்த ஞாயிற்றுக்கிழமை (27) திலீபன் நினைவேந்தல் குழுவினராலும், திங்கட்கிழமை வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களாலும் தொடர் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன.
திலீபனின் சிலையை மீள நிறுவகோரி : நல்லூரில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்
திலீபனின் சிலையை மீள நிறுவகோரி : நல்லூரில் மூன்றாவது நாளாகவும் தொடரும் போராட்டம்
முன்னெடுக்கப்படும் போராட்டங்கள்
அதனைத் தொடர்ந்து, மூன்றாவது நாளாக நேற்று (29.09.2026) பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் திலீபன் நினைவாலயம் முன்பாகப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
திலீபன் சிலை அகற்றம் : யாழ். நல்லூரில்
Advertisement
இந்தநிலையில், அகற்றப்பட்ட சிலையை மீள அதே இடத்தில் நிறுவ வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இன்று முதல் நாளைமறுதினம் வரை நல்லூரில் 'அணையா விளக்குப் போராட்டம்' முன்னெடுக்கப்படவுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பொது அமைப்புகளின் ஏற்பாட்டில் இன்று மாலை 5 மணிக்கு நல்லூரில் உள்ள திலீபனின் நினைவாலயம் முன்பாக விளக்கேற்றப்பட்டு, வெள்ளிக்கிழமை வரை அந்த விளக்கை அணைக்காமல் இரவு பகலாகத் தொடர் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தநிலையில் யாழ் பல்கலைக்கழக சமூகத்தினர் மற்றும் வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளுடைய சங்கங்கள் மற்றும் தமிழ் தேசியத்தில் பயணித்துக் கொண்டிருக்கின்ற தமிழ் தேசிய அரசியல் கட்சிகள், தமிழ் தேசியத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் இந்த தொடர் போராட்டத்திற்கு பூரண ஆதரவினை வழங்குமாறு ஏற்பாட்டாளர்கள் கோரியுள்ளமை குறிப்பிடத்தக்கது.