-

28 செப்., 2026

www.pungudutivuswiss.com
எல்லாளன் படை குறித்த முறைப்பாட்டை அடுத்தே திலீபன் சிலை அகற்றப்பட்டதாம்!
[Monday 2026-09-28 07:00]


திலீபனின் சிலை சம்பந்தமாக  கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே அது அகற்றப்பட்ட என  பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ வூட்லர் தெரிவித்துள்ளார்.

திலீபனின் சிலை சம்பந்தமாக கிடைத்த முறைப்பாட்டுக்கு அமையவே அது அகற்றப்பட்ட என பொலிஸ் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் எஃப்.யூ வூட்லர் தெரிவித்துள்ளார்

குறிப்பாக, தடை செய்யப்பட்ட அமைப்பின் உறுப்பினர் ஒருவரை நினைவுகூரும் வகையில், 'எல்லாளன் படை' என்ற குழுவொன்று செயற்படுவதாக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன், இனங்களுக்கிடையிலான நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதற்கும், யுத்த மனநிலையை உருவாக்கக்கூடிய சூழ்நிலைகளைத் தடுப்பதற்கும் திலீபனின் உருவச்சிலை அகற்றப்பட்டது.

மேலும் குறித்த விடயம் தொடர்பில் யாழ்.நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஏற்கனவே விளக்கமளித்துள்ளனர். அத்துடன் அவ்வழக்கின் அடுத்த விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் 2ஆம் திகதி நடைபெறவுள்ளது.

அத்துடன் திலீபனின் நினைவேந்தலுக்காக யாழ். மாநகர சபையினால் 26-09-2026 வரையே அனுமதி வழங்கப்பட்டிருந்ததாக பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருந்து என்றார்.

ad

ad