| சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் 10 வைத்தியர்களுக்கும் நீதிமன்றம் அழைப்பாணை! [Friday 2026-10-02 18:00] |
![]() அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவிற்கு சிகிச்சை வழங்கும் வைத்தியக் குழுவில் (Medical Board) உள்ள 10 வைத்தியர்களை ஒக்டோபர் 06 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு நீதவான் பசன் அமரசேன அழைப்பாணை விடுத்துள்ளார். |
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் (CID) தாக்கல் செய்த மனு ஒன்றின் ஊடாக முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த பின்னரே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் இதயம் வீக்கமடைந்துள்ளதாகவும், அதைக் கட்டுப்படுத்துவதற்காகச் சாதனமொன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் அண்மையில் வெளிப்படுத்தப்பட்டது. அவரது சுகாதார நிலை குறித்து வைத்தியக் குழுவொன்றினால் வெளியிடப்பட்ட அறிக்கைக்கு அமையவே இத்தகவல் தெரியவந்துள்ளது. |
-
2 அக்., 2026
www.pungudutivuswiss.com
