| கோட்டா இரண்டு வாரங்களுக்குள் கைது- தூக்கு மேடைக்கு செல்லும் நிலையும் ஏற்படலாம்! [Monday 2026-11-09 07:00] |
![]() உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்து கொண்டிருப்பதாகவும், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்னும் இரண்டு வாரங்களுக்குள் சிறைக்குச் செல்வார் என்றும் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம் என இலங்கைத் தொழிலாளர் மக்கள் முன்னணியின் தலைவர் சமீர பெரேரா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் |
கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (08) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், உயிர்த்த ஞாயிறு தினத்தில் இடம்பெற்ற கொடூரமான குற்றச்செயல் தொடர்பான உண்மைகள் தற்போது வெளிவந்துகொண்டிருக்கின்றன. அந்தக் குற்றச்செயலின் பின்னணியில் செயற்பட்டவர்கள் யார் என்பது குறித்த தகவல்கள் வெளியாகின்றன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சுரேஷ் சலேவை இயக்கியவர் யார், அவருக்குப் பின்னால் இருந்து செயற்பட்டவர் யார் என்பதையும் கவனிக்க வேண்டும். சலேவின் தலைவர் யார் என்பதும் முக்கியமான கேள்வியாகும். கோட்டாபய ராஜபக்ஷவின் கூலிக் கொலையாளி சுரேஷ் சலே. இந்த விசாரணைகள் தற்போது முக்கியமான கட்டத்தை எட்டியுள்ளன. இதனால்தான் கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேற முயற்சிக்கின்றார். எனினும், அவருக்கு நாட்டை விட்டு வெளியேற அனுமதி கிடைக்காது. இன்னும் இரண்டு வாரங்களுக்குள் கோட்டாபய ராஜபக்ஷ சிறைக்குச் செல்வார். நிலைமை மேலும் தீவிரமடைந்தால், அவர் தூக்குமேடைக்குச் செல்லும் நிலையும் ஏற்படலாம். இந்தச் செயற்பாடுகள் பௌத்த மதத்தையோ புனித வழிபாட்டுத் தலங்களையோ பாதுகாப்பதற்காக முன்னெடுக்கப்படுபவை அல்ல. கோட்டாபய ராஜபக்ஷவைச் சுற்றியுள்ள அணியினரின் அரசியல் நலன்களைப் பாதுகாப்பதற்காகவே இவை முன்னெடுக்கப்படுகின்றன. நட்சத்திர விடுதி சம்பவம் தொடர்பாகவும், ஹெந்த விதாரண, சரத் வீரசேகர உள்ளிட்டோரின் தொடர்புகள் குறித்தும் நான் குறிப்பிட்டுள்ளேன். இந்தச் செயற்பாடுகளை பௌத்த சாசனத்தைப் பாதுகாக்கும் நடவடிக்கைகளாகக் கருத முடியாது. கோட்டாபய ராஜபக்ஷவைச் சுற்றியுள்ள அரசியல் குழுவின் நலன்களைப் பாதுகாக்கும் முயற்சிகளாகவே அவற்றைப் பார்க்க வேண்டும் என்றார். |
-
9 நவ., 2026
www.pungudutivuswiss.com
