-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

25 நவ., 2026

ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழிக்கும் உக்ரைன் போர்! [Tuesday 2026-11-24 16:00]

www.pungudutivuswiss.com

போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் நீடிக்க நீடிக்க, உயிரிழப்புகளின் எண்ணிக்கை சீராக அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு எதிராக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடுத்துள்ள போர், ரஷ்ய ஆண்களின் ஒரு தலைமுறையையே அழித்துக்கொண்டிருப்பதாகவே கூறப்படுகிறது. உக்ரைன் போர், ரஷ்யாவின் மக்கள் தொகை சரிவைத் தடுப்பதற்காக புடின் மேற்கொண்டுள்ள முயற்சிகளுக்கே ஊறு விளைவிப்பதாக அமைந்துள்ளது. வெளியாகியுள்ள தரவுகளின் அடிப்படையில், பிப்ரவரி 2022 மற்றும் செப்டம்பர் 2026 இல் ரஷ்ய படையெடுப்பின் தொடக்கத்திற்கு இடையிலான போரின் காரணமாக குறைந்தது 490,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர்

சுவிட்சர்லாந்துக்கு வடகொரியா விடுத்துள்ள மிரட்டல்! [Tuesday 2026-11-24 16:00]

www.pungudutivuswiss.com

வடகொரியாவில் சமீபத்தில் திறக்கப்பட்ட சுவிஸ் தூதரக அலுவலகத்தை மூடிவிடுவோம் என வடகொரிய தரப்பு மிரட்டியுள்ளது. வடகொரியாவில் சமீபத்தில்தான் சுவிஸ் தூதரக அலுவலகம் ஒன்று திறக்கப்பட்டது. இந்நிலையில், அதை மூடிவிடுவோம் என வடகொரிய ஜனாதிபதியின் சகோதரி மிரட்டல் விடுத்துள்ளார். இம்மாதம், அதாவது, நவம்பர் மாதம் 4ஆம் திகதி, வடகொரியாவிலுள்ள Wonsan நகரில் முகாம் ஒன்று நடத்தப்பட்டது.

தையிட்டி சட்டவிரோத விகாரை காணிகளை மீளக் கையளிக்க கோரி போராட்டம்! [Tuesday 2026-11-24 20:00]

www.pungudutivuswiss.com

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தையிட்டி சட்டவிரோத விகாரை அமைந்துள்ள தமது காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (24) இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்துவதை தடுக்க பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுத்தப்படுகிறது! [Wednesday 2026-11-25 08:00]

www.pungudutivuswiss.com

பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

பேரினவாத அரசு எம்மை அடிமைகளாகவே வைத்திருக்கிறது என்றும் பயங்கரவாத தடைச் சட்டம் என கொண்டு வந்து எங்கள் மாவீரர்களின் அஞ்சலிகளை செலுத்த விடாமல் தடுத்து கொண்டே வருகின்றனர் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் கட்சியின் செயலாளருமான செல்வராசா கஜேந்திரன் தெரிவித்துள்ளார்

ad

ad