புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

6 ஆக., 2013

கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி யாழில் ஆரம்பம்
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் எதிர்வரும் 11ம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் கூட்டமைப்பு தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தில் தமிழ்க் கூட்டமைப்பு முதலமைச்சர் வேட்பாளர் சி.வி.விக்னேஸ்வரன், ஏனைய வேட்பாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கலந்துகொள்ளவுள்ளனர்.
யாழ்ப்பாணத்தைத் தொடர்ந்து கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மன்னார் ஆகிய மாவட்டங்களிலும் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தலைமையில் பிரதான தேர்தல் பிரசாரக் கூட்டங்கள் இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து யாழ்ப்பாணத்தின் முக்கிய இடங்களில் தொடர்ச்சியாக பல பாரிய தே;ர்தல் பிரசார கூட்டங்களை நடத்துவதெனவும் தமிழ்க் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளதாகத் தெரியவருகிறது.
மேலும் தமிழ்க் கூட்டமைப்பைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் வடக்கில் ஒன்றிணைத்து பிரசாரங்களை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ad

ad