புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 ஆக., 2021

யாழ்ப்பாணத்தில் கிடுகிடுவென உயரும் கொரோனா மரணங்கள்

www.pungudutivuswiss.com
யாழ். குடாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கோவிட் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களான ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.


யாழ். குடாநாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4 பேர் கோவிட் தொற்று நோயால் உயிரிழந்துள்ளனர் என்று போதனா வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தவர்களான ஊர்காவற்றுறையைச் சேர்ந்த 84 வயதுடைய பெண் ஒருவரும், மானிப்பாய், நவாலி மேற்கைச் சேர்ந்த 68 வயதுடைய பெண் ஒருவரும், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த 78 வயதுடைய பெண் ஒருவருமாக மூவர் உயிரிழந்துள்ளனர்.

அத்துடன், யாழ்ப்பாணம், கஸ்தூரியார் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர் வெளிநோயாளர் பிரிவில் உயிரிழந்த நிலையில் பி.சி.ஆர். பரிசோதனையில் கோவிட் நோய்த்தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கோவிட் நோயால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 145 ஆக உயர்வடைந்துள்ளது

ad

ad