புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

27 நவ., 2022

உலகக்கோப்பை கால்பந்து: டென்மார்க்கை வீழ்த்தி பிரான்ஸ் அதிரடி வெற்றி

www.pungudutivuswiss.com
இன்று நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் டென்மார்க் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தோகா, 22-வது உலக கோப்பை கால்பந்து போட்டி கடந்த 20-ந் தேதி கத்தாரில் கோலாகலமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் குரூப் டி-ல் இன்று நடைபெற்ற போட்டியில் பிரான்ஸ்-டென்மார்க் அணிகள் மோதின. உலகக்கோப்பைத் தொடரில் தற்போது நடப்பு சாம்பியனான பிரான்ஸ் அணி, டென்மார்க்குடன் பலப்பரீட்சை நடத்தியது. இதில் வென்றால் பிரான்ஸ் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் என்ற நிலை நிலவியது. இந்நிலையில் பரபரபாக இன்று தொடங்கிய ஆட்டத்தின் 55வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி நட்சத்திர வீரர் எம்பாப்பே கோல் அடிக்க எடுத்த முயற்சி தடுக்கப்பட்டது. இதனையடுத்து டென்மார்க் அணிக்கு எதிராக பிரான்ஸ் அணியின் எம்பாப்பே முதல் கோல் அடித்து அசத்தினார். பிரான்ஸ் அணி அடித்த முதல் கோலுக்கு பதிலடியாக, டென்மார்க் அணி வீரர் கிரிஸ்டின்ச 68வது நிமிடத்தில் கோல் அடித்தார். இதனைத்தொடர்ந்து 86வது நிமிடத்தில் பிரான்ஸ் அணியின் எம்பாப்பே இரண்டாவது கோலை அடித்து அசத்தினார். இரண்டாம் பாதி ஆட்டத்தில் 6 நிமிடங்கள் கூடுதல் நேரமாக வழங்கப்பட்டது. இந்த நிலையில் டென்மார்க் அணியை 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ஸ் அணி வீழ்த்தி வெற்றிபெற்றது. இதன் மூலம் ரவுண்ட் ஆப் 16 சுற்றுக்கு முதல் அணியாக நடப்பு சாம்பியன் பிரான்ஸ் தகுதிபெற்றுள்ளது.

ad

ad