புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

1 ஜன., 2023

யாழ். மாநகர முதல்வர் தேர்வு இனி இல்லை! - கலைப்பதற்கு சட்டமா அதிபரிடம் ஆலோசனை.

www.pungudutivuswiss.com


யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்.

யாழ். மாநகர சபைக்கு முதல்வர் தேர்வு இனி இடம்பெறாது என வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் தெரிவித்தார்

விஸ்வலிங்கம் மணிவண்ணன் யாழ். மாநகர சபை முதல்வர் பதவியை இன்று இரவு முதல் இராஜினாமா செய்யவுள்ளதாக கடிதம் முலம் யாழ். மாநகர ஆணையாளர் மற்றும் உள்ளூராட்சி ஆணையாளருக்கு தெரியப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பில் வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் செ.பிரணவநாதன் கருத்து தெரிவிக்கையில்,

மாநகர சபை கட்டளைச் சட்டத்தின் படி இனி மேயர் தெரிவை மேற்கொள்ள முடியாது. சபையை கலைப்பது தொடர்பாக நான் தீர்மானிக்க முடியாது.

அது தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். கிழக்கு மாகாணத்திலும் இவ்வாறான நிலைமை காணப்படுகின்றது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் சட்டமா அதிபரிடம் ஆலோசனை கோரப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அங்கும் பதில் கிடைக்கவில்லை என்றார்.

ad

ad