புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2023

பலாலியில் இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தினுள் உள்ள ஆலயத்தில் விக்கிரகங்கள் திருட்டு

www.pungudutivuswiss.com


பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தினுள் காணப்படும் பலாலி இராஜராஜேஸ்வரி 
அம்மன் ஆலய விக்கிரகங்கள் இரண்டினை காணவில்லை என ஆலய பரிபாலன
 சபைத் தலைவர் பலாலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றினைப் பதிவு செய்துள்ளார்.

அத்துடன் தெல்லிப்பளை பிரதேச செயலகத்திலும் விக்கிரங்கள் காணாமல் போயுள்ளமை சம்மந்தமாக முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

1846 ஆம் ஆண்டு  அம்மன் ஆலயம் பிரதிஷ்டை செய்யப்பட்டு அங்கே ஒவ்வொரு கடவுளர்களின் விக்கிரகங்களும் வைக்கப்பட்டிருந்தன. அன்றைய காலம் தொடக்கம் உற்சவ காலங்களில் பூஜை வழிபாடுகள் நடைபெற்று வந்தன. 

பின்னர் 1990 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 15 ஆம் தேதி உள்நாட்டு யுத்தம் காரணமாக எமது கிராம மக்கள் வெளியேறி யாழ்குடா நாட்டில் உள்ள பல பகுதிகளில் இடம் பெயர்ந்து வாழ்ந்து வந்தனர் 

வாழ்ந்து வரும் காலத்தில் 2002 ஆம் ஆண்டு இந்து கலாச்சார அமைச்சராக இருந்த மகேஸ்வரனாலும் எமது கிராம மக்களின் முயற்சியினாலும் இந்த ஆலயத்திற்கு சென்று வரக்கூடிய சூழ்நிலை உருவாக்கப்பட்டது. 

2002ஆம் ஆண்டிலிருந்து 2006 ஆம் ஆண்டு மே மாதம் மட்டும் இந்த ஆலயத்துக்கு சென்று வந்த போதும் நல்ல நிலையிலே ஆலயம் இருந்தது. ஆலய விக்கிரமங்களும் இருந்தன.

 யுத்தம் முடிவுக்கு வந்த பின்னர் 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி மீண்டும் இந்த ஆலயத்துக்கு சென்ற   போது விக்கிரகங்கள் எல்லாம் நல்ல நிலையிலே இருந்ததன.

தற்போது வரை இந்த ஆலயத்துக்கு விசேட தினங்களுக்கு சென்று வந்து கொண்டிருக்கின்றோம். தற்போது சிலைகள் காணாமல் போயுள்ளன. 

வடக்கின் மிகப்பெரும் இராணுவ தளமாக விளங்குகின்ற பலாலி இராணுவ தளத்தின் உயர் பாதுகாப்பு நிலையத்தில் அமைந்துள்ள குறித்த ஆலயத்தின் விக்கிரகங்கள் இராணுவத்தினருக்கு தெரியாமல் எவ்வாறு காணாமல் போய் உள்ளது என நிர்வாக தலைவர்கள் கேள்வி எழுப்புகின்றனர்? 

24 மணி நேரமும் ஆலயத்தை சூழ உள்ள பகுதிகளிலும் பாதுகாப்பு கடமையில் ராணுவம் ஈடுபட்டிருக்கும் போது நாம் பூஜை வழிபாடுகளுக்கு செல்வதற்கு கூட ராணுவத்தின் அனுமதியினை பெற்று செல்கிறோம்.

 இவ்வாறு நிலைமை இருக்கின்ற பொழுது குறித்த விக்கிரகங்கள் எப்படி காணாமல் போனது என கேள்வி எழுப்பினார் 

ad

ad