புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

30 மார்., 2023

ஈரோஸ் பிரபாகரனின் குழந்தை உள்ளிட்ட இருவரை கொன்றவர்களுக்கு மரணதண்டனை!

www.pungudutivuswiss.com


ஈரோஸ் செயலாளர் நாயகம் பிரபாகரனின் 3 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை 1997 ம் ஆண்டு கொலை செய்தமை  4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக-  முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்.

ஈரோஸ் செயலாளர் நாயகம் பிரபாகரனின் 3 வயது பிள்ளை மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய இருவரை 1997 ம் ஆண்டு கொலை செய்தமை 4 பேரை துப்பாக்கியால் சுட்டும் வெட்டியும் காயப்படுத்திய சம்பவம் தொடர்பாக- முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் உட்பட இருவருக்கு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் மரணதண்டனை வழங்கி தீர்ப்பளித்தார்

கடந்த 1997 ம் ஆண்டு மட்டக்களப்பு கோவிந்தன் வீதியில் அமைந்திருந்த (ஈரோஸ்) கட்சி காரியாலயத்தில் பாதுகாப்பு உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் கட்சி ஆதரவாளர் ஒருவருமாக இருவருக்கும் கட்சி செயலாளருக்கும் இடையே ஏற்பட்ட பிணக்கு காரணமாக கடந்த (1997-7-17) ம் திகதி பாதுகாப்பு உத்தியோகத்தரும் கட்சி ஆதரவாளரும் இணைந்து காரியாலயத்தில் தங்கியிருந்த கட்சி செயலாளர் மீதும் அவரது குடும்பத்தினர் கட்சி ஆதரவாளர் மீதும் குண்டு தாக்குதல் மற்றும் வாளால் வெட்டியும் தாக்குதலை நடாத்தினர்.

இதில் கட்சி செயலாளரின் 3 வயது பிள்ளையான கிறேமன் கிஷான் மற்றும் கட்சி உறுப்பினரான சந்திரகுமார் ஆகிய இருவரும் உயிரிழந்ததுடன் பிரபாகரன் அவரது மனைவி மற்றும் கட்சி ஆதரவாளர்கள் இருவர் உட்பட 4 பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் யோகநாதன் ஒரு கையும் புவிராஜசிங்கம் இருகைகளையும் இழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தாக்குதலை மேற்கொண்ட முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் சமீல ரஜீந்தர, கட்சி ஆதரவாளரான விவேகமூர்த்தி ஆகிய இருவரையும் கைது செய்து பின்னர் நீதிமன்ற பிணையில் விடுவிக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணைகள், மட்டக்களப்பு மேல் நீதிமன்றில் தொடர்ந்து கடந்த 25 வருடங்களாக இடம்பெற்று வந்தன.

இந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்று மேல் நீதிமன்ற நீதிபதி என்.எம்.எம். அப்துல்லாஹ் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது அரச சார்பில் அரச சட்டத்தரணி கலாநிதி அரச சட்டத்தரணி ஷெஹான் முஸ்தபாவும். எதிரிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணியின் ஆலோசனைக்கிணங்க சட்டத்தரணிகள் ஆஜராகி வாதாடினர்

இதனையடுத்து நீதிபதி குறித்த இருவரும் மனித படுகொலை மற்றும் காயத்தை ஏற்படுத்தியமை போன்ற 6 குற்றச்சாட்டுக்களில் தலா ஒருவருக்கு 3 இருந்து 5 வரையான குற்றச்சாட்டிற்கு 5 ஆயிரம் ரூபாய் அபராதமும் 10 வருட கடூழிய சிறைத்தண்டனையும், 6 குற்றச்சாட்டிற்கு தலா 5 ஆயிரம் ரூபாவும் 10 வருடம் ஒத்திவைக்கப்பட்ட 2 வருட கடூழியசிறத் தண்டனையும் முதலாவது இரண்டாவது குற்றச்சாட்டுக்களுக்கு மரணதண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

ad

ad