| ரயில் பாதையில் படுத்திருந்து பாட்டுக் கேட்டவரின் கால்கள்,கை துண்டிப்பு! [Sunday 2026-10-04 04:00] |
![]() யாழ்ப்பாணத்தில் தொடருந்து விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்றையும் இழந்துள்ளார். குறித்த சம்பவமானது நேற்றுமுன்தினம் இரவு இடம்பெற்றுள்ளது. இணுவில் காரைக்கால் பகுதியை சேர்ந்த குறித்த நபர் , தனது வீட்டிற்கு முன்பாக தொடருநந்து பாதையில் "ஹெட் செட்" அணிந்து பாடல் கேட்டுக்கொண்டு படுத்திருந்த வேளை தொடருந்து மோதியுள்ளது |
அதில் இரண்டு கால்கள் மற்றும் கை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் குறித்த நபரை அங்கிருந்து மீட்டு , யாழ்.போதனா வைத்தியசாலைக்கு அனுப்பியுள்ளனர். சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதை அடுத்து , பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். |
-
4 அக்., 2026
www.pungudutivuswiss.com
