-

1 அக்., 2026

www.pungudutivuswiss.com
ஜேர்மனியில் வேலையை காட்டத் துவங்கியது AfD கட்சி!
[Wednesday 2026-09-30 16:00]

ஜேர்மன் மாகாணமொன்றில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பிரச்சினை துவங்கியுள்ளது. ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது.  விடயம் என்னவென்றால், அக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதேயொழிய, இன்னமும் ஆட்சி அமைக்கவில்லை.

ஜேர்மன் மாகாணமொன்றில் AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ள நிலையில், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு பிரச்சினை துவங்கியுள்ளது. ஜேர்மனியின் Saxony-Anhalt மாகாணத் தேர்தலில் புலம்பெயர்தல் எதிர்ப்புக் கட்சியான AfD கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. விடயம் என்னவென்றால், அக்கட்சி அதிக வாக்குகளைப் பெற்றுள்ளதேயொழிய, இன்னமும் ஆட்சி அமைக்கவில்லை

ஆனால், அதற்குள் தன் வேலையைக் காட்டத் துவங்கிவிட்டது AfD கட்சி.

ஆம், ஜேர்மன் பொது ஒளிபரப்பு நிறுவனத்துக்கு நிதி வழங்கும் வகையில் செய்யப்பட்டிருந்த ஒப்பந்தத்தை முடிவுக்குக் கொண்டு வர இருப்பதாக தெரிவித்துள்ளது AfD கட்சி.

ஆகவே, ஒளிபரப்பு நிறுவனமான MDRம், வானொலி நிறுவனமான CORAXம், அப்படி தங்களுக்கு வழங்கப்படும் நிதி நிறுத்தப்படுமானால், அதனால் தங்கள் பணி பாதிக்கப்படும் என்று அச்சம் தெரிவித்துள்ளன.

இந்நிலையில், ஊடக சுதந்திரம் தொடர்பிலான ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் மீது அழுத்தம் அதிகரித்துவருவதை சுட்டிக்காட்டியுள்ளதுடன், சுதந்திரமான செய்தியறிக்கையின் எதிர்காலம் குறித்தும் கவலை தெரிவித்துள்ளனர்.

ad

ad