| எரிபொருள் விலைகள் அதிகரிப்பு! [Thursday 2026-10-01 06:00] |
![]() இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை உயர்த்தியுள்ளது. அதற்கமைய, ஒக்டேன் 92 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலை 15 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 414 ரூபாவாகும். |
எனினும், ஒக்டேன் 95 பெற்றோல் லீட்டர் ஒன்றின் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பதுடன், அது ஏற்கனவே இருந்த 475 ரூபாவிலேயே தொடர்ந்தும் விற்பனை செய்யப்படவுள்ளது. இருப்பினும், சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றின் விலை 50 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன்படி 478 ரூபாவாக இருந்த அதன் விலை 528 ரூபாய் வரை அதிகரித்துள்ளது. அத்துடன், 382 ரூபாவாக இருந்த டீசல் லீட்டர் ஒன்றின் விலையும் 10 ரூபாவால் உயர்த்தப்பட்டுள்ளதுடன், அதன் புதிய விலை 392 ரூபாவாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, 285 ரூபாவாக இருந்த மண்ணெண்ணெய் விலையிலும் எந்தவொரு மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது |
-
1 அக்., 2026
www.pungudutivuswiss.com
