-

புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

20 நவ., 2026

செம்மணிப் புதைகுழி குறித்து அருட்தந்தை பேனாட்டிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு! [Friday 2026-11-20 08:00]

www.pungudutivuswiss.com

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்குமாறு கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்டுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செம்மணி மனிதப்புதைகுழி தொடர்பான தகவல்களை குற்றப்புலனாய்வுப்பிரிவினருக்கு வழங்குமாறு கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட்டுக்கு யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின்குமார் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி வழக்கு விவகாரத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து ஆராயும் விதமாக நேற்று வியாழக்கிழமை (19) பி.ப 2.00 மணி முதல் மாலை 5.30 மணி வரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் எஸ்.லெனின்குமார் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடல் அமர்வில் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் குடும்பத்தினர் உள்ளடங்கலாக பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஜனாதிபதி சட்டத்தரணி கே.எஸ்.இரத்னவேல், ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணிகளான வி.எஸ்.நிரஞ்சன், ஞா.ரணித்தா, மரியதாஸ் யூட் டினேஷ், கலாநிதி கு.குருபரன், எஸ்.மணிவண்ணன், க.சுகாஷ், தி.டிலக்ஷனா, பெனிஸ்லஸ் துஷான் மற்றும் ஜெ.நிஷாந்தன் உள்ளிட்ட சட்டத்தரணிகள் குழாமும் அரச தரப்பின் சார்பில் சட்ட மருத்துவ அதிகாரி எஸ்.பிரணவன், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் உறுப்பினர் மிராக் ரஹீம் மற்றும் குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகள் உள்ளிட்டோரும் பிரசன்னமாகியிருந்தனர்.

இவ்வமர்வில் கனடாவில் வசித்துவரும் கத்தோலிக்க மதகுரு அருட்தந்தை அல்போன்சஸ் ஐ.பேர்னாட் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி மரியதாஸ் யூட் டினேஷ், தனது கட்சிக்காரர் அருட்தந்தை பேர்னாட் செம்மணி மனிதப்புதைகுழி பற்றிய பல்வேறு தகவல்களை அறிந்திருப்பதாகவும், அத்தகவல்களை வழங்குவதற்குத் தயாராக இருப்பதாகக் குறிப்பிட்டு அவர் சார்பில் சத்தியக்கடதாசியை மன்றில் தாக்கல் செய்திருப்பதாகவும் அறிவித்தார்.

அவரது வாதத்தை செவிமடுத்த நீதிவான், செம்மணி-சித்துபாத்தி மனிதப்புதைகுழி தொடர்பில் தகவல் அறிந்தவர்கள் குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் அத்தகவல்களை வழங்கமுடியும் என்றும், அதற்கமைய அருட்தந்தை பேர்னாட் செம்மணி மனிதப்புதைகுழி குறித்து அவர் அறிந்த விடயங்களை குற்றப்புலனாய்வுப் பிரிவினரிடம் வழங்கலாம் என்று அறிவித்தார்.

அதேவேளை ஏற்கனவே நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட அனுமதிக்கு அமைவாக கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்டு மரணதண்டனை அனுபவித்துவரும் லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டதா என குற்றப்புலனாய்வுப்பிரிவின் அதிகாரிகளிடம் நீதிவான் எஸ்.லெனின்குமார் கேள்வி எழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள், சோமரத்ன ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டதாகவும், அவ்வாக்குமூலத்தில் 1996 ஆம் ஆண்டு காலப்பகுதியில் செம்மணி சோதனைச்சாவடியில் தான் பணியாற்றியதாகவும், அவ்வேளையில் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்பட்டவர்கள் சிலர் அங்கு கொண்டுவரப்பட்டு கொல்லப்பட்டதாகவும், அவ்வாறு கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்ட இடங்களை அடையாளம் காண்பிக்க முடியாது என்றும் சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாக மன்றுக்குக் குறிப்பிட்டனர்.

இதன்போது குறுக்கிட்ட ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சோமரத்ன ராஜபக்ஷவிடம் குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகளால் பெறப்பட்ட வாக்குமூலம் தொடர்பில் கடந்த முதலாம் திகதி 'வீரகேசரி' பத்திரிகையில் வெளியான செய்தியின் உள்ளடக்கத்துக்கும் சோமரத்ன ராஜபக்ஷ கூறியதாக குற்றப்புலனாய்வுப்பிரிவு அதிகாரிகள் மன்றில் முன்வைத்துள்ள விடயங்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுவதாக மன்றில் பதிவுசெய்தார்.

ad

ad