-

17 நவ., 2026

www.pungudutivuswiss.com
செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி இன்று போராட்டம்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஆதரவு!
[Tuesday 2026-11-17 06:00]

செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதியானதும் சுயாதீனமானதுமான சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் முன்னெடுக்கப்படும் போராட்டத்திற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் தனது முழுமையான ஆதரவை தெரிவித்துள்ளது.

குறித்த போராட்டம் இன்றுஇடம்பெறவுள்ளது.

இந்நிலையிலேயே யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் ஊடக அறிக்கை ஒன்றில் இதனை அறிவித்துள்ளது.

மேலும் சர்வதேச சமூகம், மனித உரிமை அமைப்புகள் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் நீதியான விசாரணையை முன்னெடுப்பதற்கு ஆவன செய்ய வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது

ad

ad