-

28 அக்., 2025

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து வவுனியா!

www.pungudutivuswiss.com



சட்ட விரோதமான முறையில் சொத்து சேர்த்தமை தொடர்பில் வடக்கில் பரவலாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தை தொடர்ந்து தற்போது வவுனியாவிலும் காவல்துறையினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

சட்டவிரோதமான முறையில் சொத்து சேர்த்தவர்கள் தொடர்பில் விசாரணை செய்ய காவல்துறையின் விசேட பிரிவு ஒன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

புதிய பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டையடுத்து யாழ்ப்பாணத்தில் பலருக்கு எதிராக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வவுனியாவிலும் போதைப் பொருள் விற்பனை, மோசடியான முறையில் காணிகளை அபகரித்து சொத்து சேர்த்தமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

தூயகத்திலும் புலம்பெயர் தேசத்திலிருந்தும் போதைபெர்ருள் வர்த்தகம் மூலம் கோடீஸ்வரர்களாகிய நபர்களை இலக்கு வைத்தே விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் நினைவுகூரல் நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்கவில்லை! [Tuesday 2025-10-28 16:00]

www.pungudutivuswiss.com



1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு திங்கட்கிழமை  சீதுவ - ரத்தொலுகமவில் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

1989 இல் தெற்கில் ஜே.வி.பி எழுச்சியின் போதும், ஏனைய சந்தர்ப்பங்களிலும் கொல்லப்பட்ட மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வு திங்கட்கிழமை சீதுவ - ரத்தொலுகமவில் நடைபெற்றதுடன் அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கான மகஜர்களும் கையளிக்கப்பட்டன.

நிகழ்கால அரசியல் புதிர் மாகாணசபை தேர்தல்! பனங்காட்டான்

www.pungudutivuswiss.com


முன்னைய தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்களும், தோல்வி கண்டவர்களும் தங்கள் பெயரை வருமானத்துடன் தக்க வைப்பதற்காகவே மாகாண சபை தேர்தல்களை நோக்கி கூப்பாடு போடுவதாக அநுர குமரவின் தேசிய மக்கள் அரசு பார்க்கின்றது. 

18.253 கிலோ போதைப்பொருளுடன் கனேடியர் கைது! [Tuesday 2025-10-28 07:00]

www.pungudutivuswiss.com


கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 182.5 மில்லியன் ரூபா பெறுமதியான ஹாஷிஷ் போதைப்பொருளை கடத்த முயன்ற கனேடிய நாட்டு பிரஜை ஒருவர் இன்று (28) அதிகாலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்


www.pungudutivuswiss.com

சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக யாழ்ப்பாணத்தில் வழக்கு தாக்கல்! [Monday 2025-10-27 19:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமாக சொத்துக்கள் வைத்திருந்த 11 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக் தனபால தெரிவித்துள்ளார்

உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் இடம்பிடித்த யாழ்ப்பாணம்! [Monday 2025-10-27 19:00]

www.pungudutivuswiss.com


2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது.
இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது.

2026 ஆம் ஆண்டில் உலகில் பார்வையிட சிறந்த 25 நகரங்களில் ஒன்றாக யாழ்ப்பாணம் பெயரிடப்பட்டுள்ளது. உலகளாவிய பயண வெளியீட்டாளரான லோன்லி பிளானட்டால் இது பெயரிடப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம் இலங்கைக்கு ஒரு முக்கிய மைல்கல்லை குறிக்கிறது, கலாச்சாரம் மற்றும் பாரம்பரியம் நிறைந்த ஒரு இடமாக அதன் சர்வதேச ஈர்ப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது

27 அக்., 2025

10,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள் சுற்றி வளைக்கப்பட்டதாக ரஷ்யா அறிவிப்பு!

www.pungudutivuswiss.com

பெரும் போர்ச் செய்தி: 10,000-க்கும் மேற்பட்ட உக்ரேனிய வீரர்கள்

யாழ்.பல்கலையின் அடுத்த துணைவேந்தர் யார் ? களத்தில் பேராசிரியர் ரகுராமும்

www.pungudutivuswiss.com

மாகாணசபைத் தேர்தல்கள் குறித்து ஆராய கட்சித் தலைவர்கள் கூட்டம்? [Sunday 2025-10-26 19:00]

www.pungudutivuswiss.com


மாகாண சபை தேர்தல்கள் குறித்து தீர்மானிப்பதற்கு சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூட்ட உள்ளார். 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரைக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான மிக முக்கியமான கலந்துரையாடல்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

மாகாண சபை தேர்தல்கள் குறித்து தீர்மானிப்பதற்கு சர்வ கட்சி தலைவர்கள் கூட்டத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கூட்ட உள்ளார். 2026 ஆம் ஆண்டு வரவு செலவு திட்ட உரைக்கு பின்னர் இதற்கான அறிவிப்பு வெளிவர உள்ள நிலையில், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவது தொடர்பான மிக முக்கியமான கலந்துரையாடல்கள் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) தலைமையகத்திலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

26 அக்., 2025

யாழ்ப்பாணம் வந்தார் கவிஞர் வைரமுத்து! [Sunday 2025-10-26 19:00]

www.pungudutivuswiss.com

 கவிஞர் வைரமுத்து நடிகர் சிங்கபுலி உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். 
திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர்.

கவிஞர் வைரமுத்து நடிகர் சிங்கபுலி உள்ளிட்ட குழுவினர் இன்று யாழ்ப்பாணம் விமான நிலையத்தை வந்தடைந்தனர். திரைப்படம் ஒன்றின் தொடக்க விழாவில் கலந்து கொள்ளுவதற்காகவே குறித்த குழுவினர் வருகை தந்துள்ளனர்.

சுவிஸில் 1.5 டன் போலி கடிகாரங்கள் அழிக்கப்பட்டன

www.pungudutivuswiss.com 

பாரிஸில் நடந்த இரக்கமற்ற மிருகத்தனம்! பிரான்ஸை உலுக்கிய சிறுமி லோலாவின் கொடூரக் கொலை!

www.pungudutivuswiss.com

தூய சைத்தானியம்! பிரான்ஸை உலுக்கிய

வாயால் வடை?தீவகத்திற்கு நிதி

www.pungudutivuswiss.com

மாரடைப்பின் வகைகளும் நவீன சிகிச்சை முறைகளும்

www.pungudutivuswiss.com

🟢🔴🟢
மாரடைப்பை இன்று ஐந்தே நிமிடத்தில் கண்டுபிடித்து விடலாம். இதை உடனடியாக கவனிக்காவிட்டால் இதயத்தின் திசுக்களை செயலிழக்க செய்து, இதயத்தில் இரத்தம் பம்ப் செய்வது பாதிக்கப்பட்டு, மார்பு வலி, மூச்சு இரைப்பு, படபடப்பு, மயக்கம் என்று அடுத்தடுத்து தொடர்ந்து, கடைசியில் மரணம் சம்பவித்துவிடும்.

25 அக்., 2025

தண்டவாளம் புரட்டும் ரஷ்யப் போர் டாங்கிகள்! டாங்க் (Tank). வல்லரசாக ரஷ்யா மட்டும் திகழ்வது ஏன்?

www.pungudutivuswiss.com


தண்டவாளம் புரட்டும் ரஷ்யப் போர் டாங்கிகள்! டாங்க் (Tank). வல்லரசாக ரஷ்யா மட்டும் திகழ்வது ஏன்?

பருத்தித்துறை வர்த்தகர்களிடம் மாட்டிய இளங்குமரன்! [Saturday 2025-10-25 06:00]

www.pungudutivuswiss.com


பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு நேற்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். 
குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர்.  நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார்.

பருத்தித்துறை மரக்கறி வியாபாரிகள், வர்த்தக சங்கத்தினர் மரக்கறிச் சந்தையை நவீன சந்தைத் தொகுதியில் இடமாற்றம் செய்து தருமாறு நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். குறித்த சந்தைப் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரனுடன் வியாபாரிகள் தர்க்கத்தில் ஈடுபட்டிருந்தனர். நிலமைகளை அவதானித்த பாராளுமன்ற உறுப்பினர் இது தொடர்பில் கலந்தாலோசித்து நல்ல முடிவு எட்டப்படும் எனத் தெரிவித்தார்.

கச்சாயில் பொலிஸ் துப்பாக்கிச் சூடு- இளைஞன் படுகாயம்! [Saturday 2025-10-25 06:00]

www.pungudutivuswiss.com


யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று  இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது.

யாழ். தென்மராட்சி கச்சாய் துறைமுகப் பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். இந்த சம்பவம் நேற்று இரவு 7:30 மணியளவில் இடம் பெற்றுள்ளது

யாழ்ப்பாணத்தில் திடீர் பணக்காரர்களை குறிவைக்கும் பொலிஸ்! [Friday 2025-10-24 16:00]

www.pungudutivuswiss.com


யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

யாழ்ப்பாணத்தில் பணத்திற்காக வன்முறை சம்பவங்களில் ஈடுபட்டவர்கள், போதைப்பொருள் கடத்தல்களில் ஈடுபட்டவர்கள், வட்டிக்கு பணம் வழங்கியவர்கள் தொடர்பில் யாழ்ப்பாண குற்றத்தடுப்பு பிரிவினரால் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன

மீண்டும் நேட்டோ வான்வெளியை அத்துமீறி நுழைந்த ரஷ்ய போர் விமானங்கள்! [Friday 2025-10-24 05:00]

www.pungudutivuswiss.com

இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது.

இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்கள் நேட்டோவின் வான்வெளியில் மீண்டும் ஒரு துணிச்சலான ஊடுருவலை மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. ரஷ்ய Su-30 போர் விமானமும் Il-78 எரிபொருள் நிரப்பும் டேங்கரும் நாட்டின் வான்வெளிக்குள் அத்துமீறி நுழைந்ததாக லிதுவேனியா இராணுவம் தெரிவித்துள்ளது. சுமார் 18 நொடிகள் அவை வான்வெளியில் காணப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இரண்டு ரஷ்ய இராணுவ விமானங்களும் கலினின்கிராட் பகுதியிலிருந்து லிதுவேனியாவிற்குள் நுழைந்ததாக இராணுவம் தெரிவித்துள்ளது

ad

ad