புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

15 ஜூலை, 2014


ஜூலை 20 அன்று சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளை புளொட் தலைவர் சித்தார்த்தன் சந்திக்கிறார் 

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத் (புளொட்) தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வட மாகாணசபை உறுப்பினருமான கௌரவ தர்மலிங்கம் சித்தார்த்தன் அவர்கள் சுவிஸ்வாழ் புலம்பெயர் தமிழ் உறவுகளுடன் பகிரங்க கலந்துரையாடல் ஒன்றினை மேற்கொள்ளவிருக்கின்றார்.

இதன்போது இலங்கையின் வடகிழக்கில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் அவலங்கள், அன்றாட பிரச்சினைகள், கல்வி, சுகாதாரம், மீள்குடியேற்றம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்படவுள்ளதுடன், பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள் குறித்தும் தெளிவுபடுத்தப் படவுள்ளது.

மேலும் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு ஒரு நிரந்தரமான அரசியல் தீர்வொன்று குறித்தும், அந்த இலக்கினை நோக்கி அரசியல் பயணம் குறித்தும் சுவிஸ் வாழ் தமிழ் உறவுகளுடன் ஆராயப்படவுள்ளது. 

இக்கலந்தரையாடலானது எதிர்வரும்  20.07.2014 ஞாயிற்றுக்கிழமை மாலை 02.00 (14.00) மணியளவில் சூரிச் மாநகரின் Gemeinschaftssaal (Genossenschaftshaus Friesenberg) Schweighofstrasse 296, 8055 Zürich என்ற முகவரியில் இடம்பெற விருக்கின்றது. 



-தமிழீழ மக்கள் விடுதலைக் கழகம் (புளொட்) சுவிஸ்கிளை இதற்கான அழைப்பை விடுத்துள்ளது 

தொடர்புகட்கு: 
076.5838410, 
079.6249004, 
079.8461170,
079.8224153,
077.9485214.

**மண்டபத்துக்கு வரும் வழி...
சூரிச் புகையிரத நிலையத்தில் இருந்து "S10" உதிளிபெர்க் (Uetliberg) நோக்கி செல்லும் (தளம் -21,22) புகையிரதத்தில் மூன்றாவது தரிப்பிடமான ப்ரீசென்பேர்க் (Friesanberg ) அல்லது ஸ்ராசென்வேர்க்ஸ்அம்த் (Strassenwergesamt) நோக்கி செல்லும் 32ம் இலக்க பஸ்ஸில், அல்லது சீல்சிற்றி நோக்கி செல்லும் 89ம் இலக்க பஸ்ஸில்,  ப்ரீசென்பேர்க் ஸ்ராச (Friesanberg Strasse) தரிப்பிடத்தில் இறங்கவும்.

ad

ad