புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 ஏப்., 2015

பஞ்சாபை வீழ்த்திய டெல்லி: 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி (வீடியோ இணைப்பு)

பஞ்சாப் அணிக்கெதிரான இன்றைய ஐ.பி.எல் போட்டியில் டெல்லி அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
புனே மகாராஷ்ட்ரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்ற 8வது ஐ.பி.எல் தொடரின் இன்றைய 10வது போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் மோதின.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய முரளி விஜய் 19 ஓட்டங்களும், வீரேந்திர ஷேவாக் 47 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.
அடுத்து களமிறங்கிய அணித்தலைவர் ரித்திமான் சாகா 39 ஓட்டங்களும், மேக்ஸ்வெல் 15 ஓட்டங்களும், ஜார்ஜ் பெய்லி 19 ஓட்டங்களும் எடுத்தனர்.
20 ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 165 ஓட்டங்கள் எடுத்தது.
பந்துவீச்சில் டெல்லி சார்பில் இம்ரான் தாகிர் 3 விக்கெட்டும், பால் டுமினி 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
இதனையடுத்து 166 ஓட்டங்கள் இலக்குடன் துடுப்பெடுத்தாடிய டெல்லி அணி 19.5 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 169 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தொடக்க வீரராக களமிறங்கிய மயான்க் அகர்வால் அரைசதம் கடந்து 68 ஓட்டங்களும், டூம்னி 21 ஓட்டங்களும், யுவராஜ் சிங் அரைசதம் கடந்து 55 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஆட்டநாயகனாக மயான்க் தெரிவு செய்யப்பட்டார்.

ad

ad