புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

26 பிப்., 2020

கிளிநொச்சியில் இருந்து கடத்தப்பட்ட பெண் - ஓமந்தையில் மடக்கிப் பிடித்த இராணுவத்தினர்

கிளிநொச்சியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானில் இருந்த 4 பெண்கள் உட்பட 9 பேர், வவுனியா- ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சியிலிருந்து திருகோணமலை நோக்கி பயணித்த வானில் இருந்த 4 பெண்கள் உட்பட 9 பேர், வவுனியா- ஓமந்தை பாடசாலைக்கு முன்பாகவுள்ள இரானுவ சாவடியில் நேற்றுக் காலை 9.30 மணியளவில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் தாதியாகப் பணியாற்றும் திருகோணமலையை சேர்ந்த 25வயதுடைய என்ற பெண், தமிழ் இளைஞன் ஒருவரை காதலித்து வந்துள்ளார். இவர்களின் காதல் விவகாரம் கடந்த சில மாதங்களுக்கு முன் பெண் வீட்டாருக்கு தெரியவந்துள்ளது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்ததால், கடந்த 7 மாதங்களாக வீட்டுக்குச் செல்லாமல், குறித்த பெண் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் பெண்கள் விடுதியில் தங்கிருந்து பணியாற்றி வந்துள்ளார் .

இந்த நிலையில் நேற்று மதியம் வைத்தியசாலைக்கு வருகை தந்திருந்த சில நபர்கள் பெண்ணை வலுக்கட்டாயமாக வானில் ஏற்றி திருகோணமலைக்கு அழைத்துச் சென்றனர். பெண்ணை வலுக்கட்டாயமாக இழுப்பதினை அவதானித்த வைத்தியசாலை நிர்வாகத்தினர் கிளிநொச்சி இரானுவ தலைமையகத்திற்கு தகவல் வழங்கியுள்ளனர்.

கிளிநொச்சி இரானுவ தலைமையகத்தினர் வவுனியா இரானுவ தலைமையத்திற்கு தகவலை வழங்கி ஒமந்தை இரானுவ சாவடியில் குறித்த வானை மடக்கிப் பிடித்தனர். இதன் போது வாகனத்தில் இருந்த சாரதி உட்பட ஒன்பது நபர்களை இராணுவத்தினர் பிடித்து அவர்கள் பயணித்த வாகனத்துடன் அவர்களை ஓமந்தை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

பெண்ணை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்றவர்கள் பெண்ணின் உறவினர்கள் என தெரியவருவதாக தெரிவித்த ஒமந்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

ad

ad