புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

14 ஜூலை, 2021

யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற பஸ் வவுனியாவில் திருப்பி விடப்பட்டது

www.pungudutivuswiss.com
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது.


யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த வடபிராந்திய போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பஸ் ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியுடன் திருப்பி அனுப்பப்பட்டது.

அத்தியாவசிய தேவைகளின்றி பயணித்தவர்களை ஏற்றிச் சென்றதன் காரணமாக பஸ் திருப்பி அனுப்பப்பட்டது.

மாகாணங்களுக்கு இடையிலான பயணத்தடை வரும் 19 ஆம் திகதிவரை நடைமுறையில் உள்ளது. எனினும் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும் ஊழியர்கள் மற்றும் அத்தியாவசிய தேவை உடையவர்கள் மாகாணங்களுக்கு இடையில் பயணிக்க பஸ் மற்றும் தொடருந்து சேவைகளுக்கு இன்று தொடக்கம் மட்டுப்படுத்தப்பட்டளவில் அனுமதியளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மத்திய பஸ் நிலையத்திலிருந்து இன்று புதன்கிழமை அதிகாலை 5.45 மணிக்கு பஸ் ஒன்று கொழும்பு நோக்கிப் பயணித்தது. குறித்த பஸ் வவுனியா ஈரப்பெரியகுளம் சோதனைச் சாவடியில் சோதனைக்கு உட்படுத்தியதில் பஸ்ஸில் பயணித்தவர்களில் பலர் தங்களுடைய அத்தியாவசிய தேவைகளை உறுதிப்படுத்தத் தவறியுள்ளனர்.

அதனால் அத்தியாவசிய தேவைகளின்றிய பயணிகளை ஏற்றிச் சென்றதாக பஸ் ஈரப்பெரியகுளத்தில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டது.

இதேவேளை, மாகாணங்களுக்கு இடையிலான பஸ் மற்றும் தொடருந்து சேவைகளில் பயணிப்போர் தமது கடமை அலுவலக அடையாள அட்டை வைத்திருக்க வேண்டும் என்றும் மருத்துவ தேவைகளுக்குப் பயணிப்போர் அதுதொடர்பான ஆவணங்கள் வைத்திருக்கவேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

ad

ad