புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

17 மார்., 2022

ரஷ்யாவை ஏமாற்றிய சீனா!

www.pungudutivuswiss.com

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் சீனாவின் உதவியை ரஷ்யா எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் ரஷ்யாவிற்கு சீனா உதவ வாய்ப்பு இல்லை என்று மேற்கு உலக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல்வேறு மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன.

உக்ரைனில் போர் நடந்து வரும் நிலையில் சீனாவின் உதவியை ரஷ்யா எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறது. ஆனால் ரஷ்யாவிற்கு சீனா உதவ வாய்ப்பு இல்லை என்று மேற்கு உலக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. உக்ரைன் போர் காரணமாக ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகள் விதிக்கப்பட்டு வருகின்றன. ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் பல்வேறு மேற்கு உலக நாடுகள் கடுமையான பொருளாதார தடைகளை விதித்து உள்ளன

அதிலும் ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் முடிவையும் அமெரிக்கா கைவிட்டுள்ளது. பொருளாதார ரீதியாக ரஷ்யா கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.

சீனாவிடம் உதவி

இந்த நிலையில்தான் உக்ரைன் போரிலும் ரஷ்யாவின் ஆயுதங்கள் வேகமாக தீர்ந்தது வருகிறது. இதனால் போதிய ஆயுதங்கள் இன்றி ரஷ்யா கடுமையான பாதிப்புகளை அடைந்து உள்ளன. இந்த நிலையில்தான் சீனாவிடம் இருந்து ஆயுத உதவிகளை பெற்று உக்ரைன் மீதான தாக்குதலை தீவிரப்படுத்த ரஷ்யா முடிவு செய்துள்ளது. அதோடு சீனாவிடம் இருந்து ராணுவ வீரர்கள் பயன்படுத்தும் ரெடிமேட் உணவுகளை வாங்கவும் ரஷ்யா ஆலோசனை செய்து வருகிறது. ரஷ்ய படைகள் பின் தங்கி உள்ள நிலையில்தான் சீனாவிடம் இந்த உதவியை கேட்டுள்ளது.

எச்சரிக்கை

ஆனால் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் இதுபற்றி கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளார். சீனா ஒரு போதும் ரஷ்யாவிற்கு உதவி செய்ய நினைக்க கூடாது. நேரடியாகவோ, மறைமுகமாகவோ ரஷ்யாவிற்கு உதவ சீனா முயல கூடாது. ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை மீறி சீனா ஏதாவது உதவி செய்யும் பட்சத்தில் சீனா மீதும் கடுமையான பொருளாதார தடைகளை விதிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும், என்று அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் ஜேக் சுல்லிவான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மறுப்பு

இதையடுத்து சீனா இப்படி உதவிகள் எதையும் செய்ய போவதில்லை என்று முன்பே மறுத்து இருந்தது. ரஷ்யா எங்களிடம் அப்படி கோரிக்கை எதையும் வைக்கவில்லை என்று சீனா கூறியது. ரஷ்ய தரப்பும் இதே கருத்தை தெரிவித்தது. எங்களிடம் போதிய ஆயுதங்கள் உள்ளது. உணவும் உள்ளது. நாங்கள் சீனாவிடம் உதவியும் கேட்கவில்லை என்று கூறியது. ஆனால் ரஷ்யா இப்படி உதவி கேட்டது உண்மைதான் என்று அமெரிக்கா சார்பாக ஐரோப்பாவிடம் தெரிவிக்கப்பட்டது.

இப்போது கழன்று கொண்ட சீனா

இந்த நிலையில்தான் ரஷ்யாவிற்கு சீனா உதவ வாய்ப்பு இல்லை என்று மேற்கு உலக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன. அமெரிக்காவின் பொருளாதார தடைக்கு அஞ்சி சீனா இப்படி கழன்று கொண்டதாக கூறப்படுகிறது. சீனாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் வாங்க் இ அளித்துள்ள பேட்டியில், அமெரிக்காவின் பொருளாதார தடைகளை தவிர்க்க நாங்கள் விரும்புகிறோம். இந்த பிரச்சனையில் எங்களுக்கு எந்த பங்கும் இல்லை.

நம்பிக்கை இல்லை

அதனால் எங்களுக்கு எதிராக பொருளாதார தடைகளை விதிக்க கூடாது. எங்களின் உரிமைகளை பாதுகாக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. பொருளாதார தடைகள் மூலம் இரண்டு நாட்டு பிரச்சனையை தீர்க்க முடியாது. அதை நாங்கள் ஆதரிக்கவும் மாட்டோம். அதே சமயம் தற்போது நடக்கும் பிரச்சனை காரணமாக பொருளாதார தடைகளை எதிர்கொள்ள சீனா தயாராக இல்லை என்று கூறியுள்ளார்.

ரஷ்யாவிற்கு சிக்கல்

சீனா தங்களுக்கு உதவும் என்று நம்பி இருந்த ரஷ்யாவிற்கு இது பின்னடைவாக மாறியுள்ளது. ரஷ்யாவின் தோட்டாக்கள், குண்டுகள் இன்னும் 9 நாட்களில் தீர்ந்து விடும் என்று அமெரிக்கா உளவுத்துறை கூறியுள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் ரஷ்யாவிற்கு உதவ சீனா நாசுக்காக மறுத்துள்ளது. இருப்பினும் ரஷ்யாவிற்கு சீனா மறைமுக உதவிகளை, வேறு விதமான உதவிகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ad

ad