புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

11 நவ., 2022

உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரான்ஸ் அணி அறிவிப்பு

www.pungudutivuswiss.com
உலக கோப்பை கால்பந்து போட்டிக்கான பிரான்ஸ் அணி அறிவிக்கப்பட்டுள்ளது. பாரீஸ், 22-வது உலக கோப்பை கால்பந்து திருவிழா கத்தார் நாட்டில் வருகிற 20-ந் தேதி முதல் டிசம்பர் 18-ந் தேதி வரை நடக்கிறது. கத்தாரில் உள்ள தோகா, அல் கோர், லுசைல், அல் ரையான், அல் வக்ரா ஆகிய 5 நகரங்களில் உள்ள 8 மைதானங்களில் போட்டி அரங்கேறுகிறது. அரபு நாட்டில் முதல்முறையாக நடைபெறும் இந்த போட்டியில் பங்கேற்கும் 32 அணிகள் 8 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் கால்இறுதிக்கு முந்தைய நாக்-அவுட் (ரவுண்ட் 16) சுற்றுக்கு தகுதி பெறும். இதில் நடப்பு சாம்பியன் பிரான்ஸ் அணி 'டி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. 16-வது முறையாக உலக கோப்பை போட்டியில் அடியெடுத்து வைக்கும் பிரான்ஸ் அணி 1998, 2018 ஆகிய ஆண்டுகளில் கோப்பையை வென்று இருக்கிறது. இந்த முறை பிரான்ஸ் அணி உலக கோப்பையை வென்றால் தொடர்ந்து 2-வது முறையாக உலக கோப்பையை வென்ற 3-வது நாடு என்ற பெருமையை தன்வசப்படுத்தும். ஏற்கனவே இத்தாலி (1934, 1938), பிரேசில் (1958, 1962) ஆகிய அணிகள் தொடர்ச்சியாக 2 தடவை உலக கோப்பையை கைப்பற்றி இருக்கின்றன. இந்நிலையில் உலக கோப்பை போட்டிக்கான 25 பேர் கொண்ட பிரான்ஸ் அணியை அதன் பயிற்சியாளர் டிடைர் டெஸ்சாம்ப்ஸ் நேற்று அறிவித்தார். அதன்படி உலக கோப்பை போட்டிக்கான பிரான்ஸ் அணி வருமாறு:- கோல்கீப்பர்கள்: ஹூகோ லோரிஸ், ஸ்டீவ் மன்டான்டா, அல்போன்ஸ் அரோலா பின்களம்: லூகாஸ் ஹெர்னாண்டஸ், தியோ ஹெர்னாண்டஸ், பிரெஸ்னல் கிம்பெம்பே, இப்ராகிமா கோனேட், ஜூலஸ் கோண்டே, பெஞ்சமின் பவார்ட், வில்லியம் சலிபா, ரபெல் வரேன், டயோட் உபாமிகனோ நடுகளம்: எடார்டோ கமாவிங்கா, யூசோப் போபனா, மேத்யூ கான்டோசி, அட்ரியன் ரபியாட், அரேலியன் சோவாமெனி, ஜோர்டன் வெரேட்டவுட் முன்களம்: கரீம் பென்ஜிமா, கிங்ஸ்லி கோமன், ஓஸ்மானே டெம்பல்

ad

ad