புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

16 நவ., 2022

தீர்வு விவகாரத்தில் ஐ.நாவின் தலையீடு அவசியம்

www.pungudutivuswiss.com

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று  கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் அரசியல் பிரிவின் இயக்குநர் தலைமையிலான குழுவினருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. கொழும்பிலுள்ள ஐ.நா. அலுவலகத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது

இதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் தலைவர் இரா. சம்பந்தன், பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன், பங்காளிக் கட்சிகளின் தலைவர்களான மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன் , தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

இந்தச் சந்திப்பில், அரசியல் ஸ்திரத்தன்மை பற்றியும் விசேடமாக வடக்கு, கிழக்கில் தொடர்ந்து இடம்பெறும் நில அபகரிப்பு குறித்தும் எடுத்துக் கூறியதாக கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் தமிழ் மக்களின் தீர்வு விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் தலையீடு அவசியமானது என கூட்டமைப்பு வலியுறுத்தியதாக அவர் தெரிவித்துள்ளார்.


ad

ad