புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 மே, 2025

தங்க முலாம் பூசிய துப்பாக்கி விவகாரத்தில் துமிந்த திஸாநாயக்க கைது! [Friday 2025-05-23 17:00]

www.pungudutivuswiss.com


வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளவத்தையில் தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி கைப்பற்றப்பட்ட விவகாரம் தொடர்பில் முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திஸாநாயக்க இன்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

திம்பிரிகஸ்யாயவில் உள்ள சொகுசு தொடர்மாடி குடியிருப்பில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி தொடர்பில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டனர்.

கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பெண்ணொருவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொழும்பு - வெள்ளவத்தை ஹவலொக் சிட்டி ஆடம்பர குடியிருப்புத் தொகுதியில் பெண்ணிடமிருந்து கைப்பற்றப்பட்ட தங்க முலாம் பூசப்பட்ட துப்பாக்கி தொடர்பான விசாரணைகள் பயங்கரவாத தடுப்பு பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளன.

குறித்த வீட்டுத் தொகுதியின் அடுக்குமாடி குடியிருப்பில் பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட T-56 ரக துப்பாக்கி தொடர்பில் 40 மற்றும் 68 வயதுடைய இரண்டு பெண்கள் செவ்வாய்க்கிழமை (20) கைது செய்யப்பட்டனர்.

ad

ad