புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

24 செப்., 2025

இலங்கையில் சிக்கப் போகும் அதியுச்ச அரசியல் தலைமை! பரபரப்பாகும் தென்னிலங்கை

www.pungudutivuswiss.com


இலங்கையில் பிரபல அரசியல் தலைவர் ஒருவர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக பொலிஸாரை அரசியல் அழுத்தங்களில் இருந்து பாதுகாக்கும் சர்வதேச அமைப்பின் அதிகாரியான முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர் அஜித் தர்மபால தெரிவித்துள்ளார்.

பிரபல யூடியுப் செய்தி சேவை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

பாதாள உலக குழுக்களுடன் முன்னாள் ஆட்சியாளர்களுடன் தொடர்புடைய பிரபல கட்சியை சேர்ந்த பலர் நேரடி தொடர்பு வைத்துள்ளனர். பாதாள உலக குழு உறுப்பினர்களால் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கு உயிர் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளது.

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு! ஐரோப்பா வாழ் இலங்கை பெண்

இலங்கையிலுள்ள தாயை கண்டுபிடித்தால் பெறுமதியான பணப்பரிசு! ஐரோப்பா வாழ் இலங்கை பெண்

பல முக்கிய தகவல்கள் 

இதுவரையில் கைது செய்யப்பட்டவர்களால் புலனாய்வு பிரிவிற்கு பல முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பில் முக்கிய பல தகவல்களை தற்போது வெளியிட முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் சிக்கப் போகும் அதியுச்ச அரசியல் தலைமை! பரபரப்பாகும் தென்னிலங்கை | Famous Politician To Be Arrest In Sri Lanka

அவ்வாறான தகவல்களை வெளியிட்டால் கைது செய்யப்படவுள்ள பிரபல அரசியல் தலைமை தப்பித்துக் கொள்ள வாய்ப்பு ஏற்படும்.

பாதுகாப்பு படைப்பிரிவு அல்லது பொலிஸ் அதிகாரியின் உடையில் வரும் மர்ம நபர்களால் ஜனாதிபதி கொலை செய்யப்படலாம் என்பதற்கான தெளிவான ஆதாரங்கள் கிடைத்துள்ளது. இது தொடர்பான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பாதாள குழு உறுப்பினர்களுடன் அரசியல்வாதிகளுக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளமை அண்மையில் கைது செய்யப்பட்ட மனம்பேரி மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கெஹெல்பத்தர பத்மே மற்றும் நகர பிதாவான எரங்க சேனாரத்ன டுபாயில் ஒன்றாக நீச்சல் தடாகத்தில் குளிக்கும் புகைப்படங்கள் என்னிடம் உள்ளது. தங்காலையில் மிகப்பெரிய அளவில் ஐஸ் போதைபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

ஐஎஸ் போதைப்பொருள் மீட்பின் போது 3 பேர் உயிரிழந்துள்ளனர். அந்த சம்பவங்கள் ஒன்றோடு ஒன்று தொடர்புபட்டுள்ளது. கடந்த காலங்களில் அரசியல்வாதிகள் மற்றும் பொலிஸ் மா அதிபருடன் பாதாள உலக குழுவிற்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டது.

சிக்கவுள்ள மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவர் : விசாரணையில் வெளிப்பட்ட தகவல்கள்

சிக்கவுள்ள மற்றுமொரு பாதாள உலகக் குழுத் தலைவர் :

ad

ad