அபாயகரமான வகையில் அட்லாண்டிக் கடலில் புலம்பெயர்வோர் படகுகள்
Swiss NGO spots migrant boats in Atlantic: அபாயகரமான வகையில் அட்லாண்டிக் கடலில் பயணிக்கும் புலம்பெயர்வோர் படகுகளைக் கண்டதாக சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
சுவிஸ் தொண்டு நிறுவனம் ஒன்று, அட்லாண்டிக் கடலில் அபாயகரமான வகையில் புலம்பெயர்வோர் பயணிப்பதைக் கண்டதாக தெரிவித்துள்ளது.
அபாயகரமான வகையில் புலம்பெயர்வோர் படகுகள்
பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவரும் Humanitarian Pilots Initiative (HPI) என்னும் சுவிஸ் தொண்டு நிறுவனம், புலம்பெயர்வோர் கடலில் படகுகளில் பயணிப்பதை விமானங்கள் மூலம் கண்காணித்து, அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால், அது குறித்து மீட்புக் குழுக்களுக்கு தகவலளிப்பது முதலான பல்வேறு விடயங்களைச் செய்துவருகிறது.

இந்நிலையில், நேற்று, புலம்பெயர்வோர் பயணிக்கும் ஐந்து படகுகள், அபாயகரமான வகையில் அட்லாண்டிக் பெருங்கடலில் பயணிப்பதைக் கண்டதாக HPI தெரிவித்துள்ளது.
அவற்றில் ஒரு படகில் தண்ணீர் ஏறியிருக்க, படகிலிருந்தோர், அந்த தண்ணீரை வெளியேற்றிக்கொண்டிருந்ததைக் கண்டதாக HPI அமைப்பினர் தெரிவித்துள்ளார்கள்.
அதேபோல, மற்றொரு படகில் எக்கச்சக்கமானவர்கள் பயணித்ததால், அவர்களுக்கு உட்காரக்கூட இடமில்லாமல், நின்றபடி பயணிக்கும் காட்சிகளைக் கண்டதாகவும், HPI தெரிவித்துள்ளது.
இப்படி நின்றபடி பயணிக்கும்போது, தவறி கடலில் விழும் அபாயம் அதிகம்.
இந்த ஆண்டின் துவக்கத்திலிருந்து, இதுவரை இப்படி படகுகளில் பயணித்தவர்களில் 850க்கும் மேற்பட்டவர்கள் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளதாக HPI தெரிவிக்கிறது.
HPI அமைப்பு, அந்த படகுகளைக் கண்ட இடம், மேற்கு ஆப்பிரிக்காவுக்கும் கேனரி தீவுகளுக்கும் இடையில் உள்ள இடமாகும்.
இந்த கேனரி தீவுகளுக்குத்தான் இந்த மாதத்தின் முதல் பாதியில் 11,000க்கும் மேற்பட்டவர்கள் சென்றடைந்த விடயம் தலைப்புச் செய்தியானது என்பது குறிப்பிடத்தக்கது.




