| யாழ்ப்பாணத்தில் இளம்பெண்ணை வெட்டிக் கொலை செய்து விட்டு ரயில் முன் பாய்ந்தார் இளைஞன்! [Tuesday 2026-10-06 05:00] |
![]() யாழ்ப்பாணத்தில் இளம் பெண்ணொருவரை கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞன் ஒருவர் தொடருந்து முன்பாக பாய்ந்து உயிரிழந்துள்ளார் |
யாழ். கோவில் வீதியில் உள்ள வீடொன்றில் நேற்று மாலை அத்துமீறி நுழைந்த இளைஞர் வீட்டில் இருந்த இளம்பெண் மீது கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை, பெண்ணின் தாயார் மீதும் இளைஞர் கத்திக்குத்து தாக்குதலை மேற்கொண்டதில், தாயார் படுகாயமடைந்த நிலையில், யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தாக்குதலை மேற்கொண்ட இளைஞர் அங்கிருந்து தப்பிச் சென்று அரியாலை பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த இரவு தபால் தொடருந்து முன் பாய்ந்து உயிரை மாய்த்துள்ளார் |
-
6 அக்., 2026
www.pungudutivuswiss.com
