www.pungudutivuswiss.com
 தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் 2027 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, பாராளுமன்றத்தில் 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
|
இன்று மாலை 6.50 மணியளவில் நடைபெற்ற வாக்கெடுப்பில், வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்புக்கு ஆதரவாக 157 வாக்குகளும், எதிராக 60 வாக்குகளும் அளிக்கப்பட்டன. இதேவேளை, வாக்களிப்பின் போது 7 பாராளுமன்ற உறுப்பினர்கள் சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மூன்றாவது வரவு செலவுத் திட்டமான இது, ஜனாதிபதியும் நிதி அமைச்சருமான அநுரகுமார திசாநாயக்கவினால் கடந்த 12 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. அன்றைய தினம் ஜனாதிபதியினால் சுமார் 5 மணி நேர வரவு செலவுத் திட்ட உரை நிகழ்த்தப்பட்டது.அதனைத் தொடர்ந்து, இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் கடந்த 13 ஆம் திகதி ஆரம்பமாகி இன்று வரை 7 நாட்கள் நடைபெற்றதன் பின்னரே இந்த வாக்கெடுப்பு நடத்தப்பட்டுள்ளது. |