புங்குடுதீவெனும் புனிதபூமியின் புகழ் பரப்பும் பேரிணையம் இது -புங்குடுதீவின் வரலாறு , தகவல்கள், படங்கள், காணொளிகள்,ஆவணங்கள்-இத்தோடு 24 மணிநேர தரமிக்க செய்தி தரவேற்றதோடு உஙகளை நித்தம் சந்திக்கும் ஒரே இணையம்-இங்குள்ள விளம்பரங்களில் கிளிக் செய்து விட்டு சென்றால் எங்களுக்கு ஆதரவாக இருக்கும் .தொடர்புகள்-pungudutivu1@gmail.com

-

3 ஆக., 2013

டென்மார்க்கின் மிகப்பெரிய சுற்றுப்போட்டியான Vildbjerg cup 2013 01.08.2013 அன்று Vildbjerg நகரில் ஆரம்பமானது

இவ் சுற்றுப்போட்டியில் America, Malta, Germany, Nertheland,  Norway,
Sweden, Findland, Island ,Faroe, Islands, Bermuda,  உடன்  Tamileelam
அணியும் கலந்து கொள்கின்றன.
Vildbjerg cup 2013 ன் இரண்டாம் நாளான 02.08.2013 4 போட்டிகளில்
விளையாடிய தமிழீழ அணிகள் 3 போட்டிகளில் தோல்வியையும் 1 போட்டியில்
வெற்றியையும் தழுவி கொண்டன.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 2 Skarup IF

இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் காலை 08:00 மணிக்கு
Skarup IF அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட போட்டியில் Skarup IF 2
இலக்குகளையும் தமிழீழ அணி 1 இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும்
வாய்ப்பினை இழந்தனர்.

போட்டியின் இரண்டாம் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 1 இலக்கை
எடுத்து அணிக்கு பெருமை சேர்த்தார்.

எப்படி இருப்பினும் சோர்வடையாது முயன்ற எமது வீரர்கள் எதிர் அணியினருக்கு
தக்க சவாலாக விளையாடினார்கள்

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 0 : 4 Hong GF

காலை 09:45 மணிக்கு Hong GF அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை
பந்தாட்ட போட்டியில் Hong GF அணி 4 இலக்குகளையும் தமிழீழ அணி 0
இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 : 4 Aabyhoj IF

மதியம் 14:25 மணிக்கு Aabyhoj IFஅணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை
பந்தாட்ட போட்டியில் Aabyhoj IFஅணி 4 இலக்குகளையும் தமிழீழ அணி 1
இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

போட்டியின் இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கை எடுத்து
அணிக்கு பெருமை சேர்த்தார்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 5 : 2 Roslev IK

மாலை 15:35 மணிக்கு Roslev IKஅணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை
பந்தாட்ட போட்டியில் Roslev IK 2 இலக்குகளையும் தமிழீழ அணி 5
இலக்குகளையும் எடுத்து இந்த போட்டியில் வென்றனர்.

சாரங்கன் சிவநாதன் 2 இலக்குகளையும், தினோஜன் திலீபன் 1 இலக்கையும்,
அபிநயன் ராசசிங்கம் 2 இலக்குகளையும் எடுத்து அணியின் வெற்றிக்கு
வித்திட்டனர்.



இவ்  நிகழ்வின் ஆரம்ப நிகழ்வாக மதியம் 13:15 மணிக்கு அணிகளின் அணிவகுப்பு
Park Alle யில் இருந்து Vildbjerg  நகர் ஊடாக  Sports Alle யை
சென்றடைந்தது. இவ் அணிவகுப்பில் தமிழீழ அணிகள் தமிழீழம் என பொறிக்கப்பட்ட
உடையுடன் தமிழீழத் தேசியக் கொடியை தாங்கியவாறு அணிவகுப்பில் வலம்
வந்தனர்.

வேற்று இனத்தவர்கள் தமிழீழ அணியை ஒரு நாடாக அங்கிகரித்து உற்சாகத்துடன்
வரவேற்றார்கள்.

முதல் போட்டில் வாகை சூடிய 15 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி

இன்று Vildbjerg நகரில் அமைத்துள்ள மைதானத்தில் மாலை 15:30 மணிக்கு
Hovme/ Tistuup அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை பந்தாட்ட
போட்டியில் Hovme/ Tistuup  1 இலக்கையும் தமிழீழ அணி 3 இலக்குகளையும்
எடுத்து இந்த போட்டியில் வென்றனர்.

போட்டின் முதல் அரைப்பகுதியில் சங்கீத் சத்தியமூர்த்தி 2 இலக்ககளையும்
இரண்டாம் அரைப்பகுதியில் யுகன் பொன்னையா 1 இலக்கையும் எடுத்து அணியின்
வெற்றிக்கு வித்திட்டனர்.

13 வயதிற்குட்பட்ட தமிழீழ அணி 1 – Mariager 2

மாலை 15:30 மணிக்கு  Mariager அணிக்கும் தமிழீழ அணிக்கும் நடந்த உதை
பந்தாட்ட போட்டியில்  Mariager அணி  2 இலக்குகளையும் தமிழீழ அணி 1
இலக்கையும் எடுத்து இந்த போட்டியில் வெல்லும் வாய்ப்பினை இழந்தனர்.

இரண்டாம் அரைப்பகுதியில் ராகவ்  சிவகுமார் 1 இலக்கை  எடுத்து அணிக்கு
பெருமை சேர்த்தார்.

ad

ad